”தொப்புளில் முத்தம்.... உனக்கு தேவையானு இப்ப கூட யோசிக்கிறேன்” - நடிகர் சரத்குமார் ஓபன் டாக்
”அதன் பிறகு அழகான பெண் ஒருவர், எத்திராஜ் காலேஜ்ல இருந்து வருவாங்க. அவங்கள பார்க்க எல்லோரும் வெயிட் பண்ணுவோம் .”
சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகர் சரத்குமார். பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் சரத்குமாருக்கும் நடிகை நமீதாவிற்கும் கெமிஸ்ட்ரி செமையாக இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு பேசப்பட்டது. குறிப்பாக ஏய் படத்தின் அர்ஜூனா..அர்ஜுனா பாடலில் எக்கச்சக்க ரொமான்ஸ்களை அள்ளி தெளித்திருப்பார்கள் இருவரும் . இந்த நிலையில் அந்த பாடலில் நடிக்க முதலில் தயக்கம் காட்டியதாக நேர்காணல் ஒன்றில் சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அதில்” மாஸ்டர் வந்து சுந்தர் மாஸ்டர். அந்த டைம்லதான் நாம இமேஜ்லாம் கொஞ்சம் பார்ப்போம். அப்போ வந்து மாஸ்டர் ஒரு காட்சி வச்சிருப்பாரு. அதுல தொப்புள் கிட்ட வந்து , முத்தம் கொடுத்து ..அதன் பிறகு வாயில இருந்து தண்ணீரை துப்பனும்னு சொன்னார். நான் இதெல்லாம் ஓவரா இல்லையா மாஸ்டர், எனக்கு ஒரு மாதிரி இருக்கு..வேண்டாம் மாஸ்டர், அப்படியெல்லாம் வைக்காதீங்க மாஸ்டர்னு சொன்னேன். உடனே அவர் பண்ணுறீங்களா இல்லையா... மக்கள் ரசிப்பாங்கன்னு சொன்னாரு.. இன்றைக்கு என் பையன் பார்த்துட்டு , எப்படி டாடினு கேட்குறான்.... இதெல்லாம் உனக்கு தேவையாடானு இப்போ கூட நினைத்து பார்க்கிறேன். பையனே கேட்குற மாதிரி ஆயிடுச்சு. அது வந்தாலே ஆஃப் பண்ணிடுறது டிவிய.
View this post on Instagram
நாட்டி விஷயங்களை வீட்டுல பண்ண மாட்டேன். பஸ்ல பண்ணவேன். பஸ்ல மேலே பிடிக்க இருக்கும் கம்பி சுத்தும் . அதை எல்லோரும் பிடித்திருக்கும் சமயத்துல சுத்தி விட்டுருவேன் . எல்லாரும் என்னனு முழிப்பாங்க. அதன் பிறகு பலம் எப்படி இருக்குனு செக் பண்ணேனு சொல்லுவேன். அதன் பிறகு அழகான பெண் ஒருவர், எத்திராஜ் காலேஜ்ல இருந்து வருவாங்க. அவங்கள பார்க்க எல்லோரும் வெயிட் பண்ணுவோம் . அதுனாலேயே பஸ்ஸ அங்க நிறுத்த மாட்டாங்க. டபுள் விசில் கொடுத்து போயிடுவாங்க. அந்த சமயத்துல ஆட்டோ எடுத்து பஸ்ஸ துரத்தி, அந்த பெண் இறங்கும் பொழுது குட் ஈவிணிங்னு சொல்லிட்டு போயிடுவோம் “ என தன் வாழ்க்கையில் நடந்த வேடிக்கையான விஷயங்களை நகைச்சுவை ததும்ப பகிர்ந்திருக்கிறார் சரத்குமார்