DD Next Level: சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' பயமுறுத்தியதா? வெறுப்பேற்றியதா? ட்விட்டர் விமர்சனம்!
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி உள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான ரொமான்டிக் காமெடி படங்கள் பெரிதாக கைகொடுக்காத போதிலும், ஹாரர் கான்செப்டில் எடுக்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து கை கொடுத்து வருகிறது. இதை நம்பி தற்போது மீண்டும் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் தான் ''டிடி நெக்ஸ்ட் லெவல்'.
காமெடியனாக இருந்த சந்தானம், ஹீரோவாக அவதாரம் எடுத்த முதல் படம், 2008-ஆம் ஆண்டு வெளியான 'அறை எண் 305-ல் கடவுள்'. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், முதலுக்கு மோசம் இல்லாத வசூலை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம், சந்தானத்தை வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் மாற்றிய நிலையில், தொடர்ந்து ஹீரோ சுப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு, சந்தானம் இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் நடித்த திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. ஹாரர் காமெடி கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'தில்லுக்கு துட்டு 2 ' என்கிற பெயரில் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
இரண்டு படங்களுமே ஹாரர் படங்கள் என்பதை தவிர, இந்த இரு படங்களும் வெவ்வேறு கதைகளத்தில் எடுக்கப்பட்டு ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குளுகுளு, ஏஜென்ட் கண்ணாயிரம், போன்ற பல படங்களில் நடித்தும்... அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எனவே 'டிடி ரிட்டன்ஸ்' என்கிற படத்தின் மூலம் மீண்டும் ஹாரர் காமெடியை கையில் எடுத்தார்.
2023 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தில் சந்தானத்துடன் கீத்திகா திவாரி, செல்வ ராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சந்தானம் கிருஷ்ணமூர்த்தி என்கிற சினிமா திரைப்பட விமர்சகராக நடித்துள்ளார். இதுவரை திரையில் சொல்லப்படாத புதிய கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, ஆப்ரோ இசையமைக்க, விக்ரமன் படத்தொகுப்பு செய்ய, தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படம் இன்று (மே 16-ஆம் தேதி) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இந்த படத்திற்கு கிடைத்துவரும் விமர்சனங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
#DevilsDoubleNextLevel - A horror spoof film that relies more on the various layers in screenplay . The film is all about how a YouTube critic goes into a film, subjected to various genres to save his family. Even the end card , lead to sequel comes under this screenplay trick.… pic.twitter.com/R4Gm3yPOED
— Rajasekar (@sekartweets) May 16, 2025
ரசிகர் ஒருவர் இந்த படம் குறித்து போட்டிருக்கும் பதிவில், "Devils Double Next Level திரைப்படம், பல்வேறு அடுக்குகளை அதிகம் நம்பியிருக்கும் ஒரு திகில் ஸ்பூஃப் படம். ஒரு யூடியூப் விமர்சகர் தனது குடும்பத்தைக் காப்பாற்ற பல்வேறு காரணங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு படத்திற்குள் எவ்வாறு செல்கிறார் என்பதை பற்றியது தான் இந்த படம். சந்தானம் மற்றும் ராஜேந்திரன் காமெடி காட்சிகள் நன்றாக உள்ளது. மாறன் நகைச்சுவை காட்சிகள் சிறப்பு. மற்ற நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது. முந்தைய பகுதியுடன் ஒப்பிடும் போது, இந்த படத்தில் காமெடி மற்றும் விறுவிறுப்பு சற்று குறைவாகவே உள்ளது. அதே நேரம் இயக்குனர் பிரேம் ஆனந்த் நகைச்சுவை டெம்ப்ளேட்டிற்குள் தனது திரைக்கதை புத்திசாலித்தனத்தால் பார்வையாளர்களை மேலும் கவர்கிறார். ஒட்டுமொத்தமாக, DD Next Level திரையரங்குகளில் சிரித்து பார்க்க ஒரு சிறந்த திரைப்படம் என கூறியுள்ளார்.
#DevilsDoubleNextLevel #DDNextLevel It is like horror spoof film , movie within a movie. Comedy works only in parts. @iamsanthanam as reviewer finally justifies the characterization in the climax.
— Sathish Kumar M (@sathishmsk) May 15, 2025
மற்றொருவர், "Devils Double Next Level திரைப்படம் ஒரு திகிலூட்டும் ஸ்பூஃப் படம் போன்றது, ஒரு படத்திற்குள் படம். நகைச்சுவை பகுதிகள் மட்டுமே ரசிகர்களை கவர்கிறது. சந்தானம் ஒரு விமர்சகராக கிளைமேக்ஸ் காட்சியில் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தியுள்ளார் என கூறி இருக்கிறார்.
DD next level with a banger audience response ❤️🔥 Santhanam comedy timing 🔥 Fun filled thriller #Santhanam #DDNextLevel #DDNextLevelReview #STR #Arya #Review #FinalDestinationBloodlines pic.twitter.com/rZJkSU9nrH
— 𝕯𝖊𝖊𝖕𝖆𝖐🦅 (@Deepak32763716) May 16, 2025
ஒரு ரசிகர், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரசிகர்களின் அமோக வரவேற்போடு ஓடி கொண்டிருப்பதாகவும், சந்தானம் காமெடி டைமிங் ஃபயர் போல் இருக்கிறது. இது ஒரு வேடிக்கை நிறைந்த திரில் அனுபவத்தை கொடுக்கிறது என கூறியுள்ளார்.
#DDNextLevel #DevilsDoubleNextLevel
— AmuthaBharathi (@CinemaWithAB) May 16, 2025
[#ABRatings - 3/5]
- A passable entertainer which follows the template format like other parts🤝
- Nice plot where Santhanam appears as an reviewer & it's effect👌
- Comedy works Partially throughout the film. Could have worked more on those… pic.twitter.com/MBN6QjgYIN
மற்றொரு விமர்சனத்தில், "டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம், மற்ற பகுதிகளைப் போலவே டெம்ப்ளேட் வடிவமைப்பைப் பின்பற்றும் ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய பொழுதுபோக்கு படம் என்பதை நிரூபித்துள்ளது. சந்தானம் ஒரு விமர்சகராகத் தோன்றும் ஒரு நல்ல கதைக்களம். படம் முழுவதும் நகைச்சுவை ஓரளவுக்கு வேலை செய்கிறது. அதே நேரம் இன்னும் உழைப்பை போட்டிருக்கலாம் என தோன்றுகிறது. செல்வராகவன் & GVM கதாபாத்திரம் அருமை. ரெடின் & மாறன் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். மற்ற படங்களிலிருந்து நிறைய குறிப்புகள் நன்றாக வேலை செய்த பாடல்களை மீண்டும் நினைவு படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், முந்தைய 3 பாகங்களுக்கு இணையாக இப்படம் இல்லை என்ற உணர்வு எழுகிறது. ஆனால் ஒரு முறை பார்க்கக்கூடிய திகில் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படம் என கூறி இந்த படத்திற்கு 5க்கு 3 மதிப்பீடு கொடுத்துள்ளார்.





















