ஆல்யாவும், சஞ்சீவும் காரை பரிசு கொடுத்திருக்காங்க.. யாருக்கு தெரியுமா மக்களே? குவியும் வாழ்த்துகள்..
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இவரும் சின்னத்திரை சீரியல் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர்.
ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் தனது மனைவி ஆல்யா மான்சாவுடன் சேர்ந்து தனது சகோதரர் சமீருக்கு பென்ஸ் காரை பரிசளித்துள்ளதைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளனர். இன்ஸ்டாவிலும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். வேலைக்காரப் பெண்ணாக வீட்டில் வலம் வந்த செம்பருத்தியை, அந்த வீட்டின் கடைசி பையன் கார்த்திக் எதிர்பாராதவிதமாக திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. வெளிநாட்டில் இருந்த வந்ததால், கிராமத்துப்பெண்ணுடன் வாழ முடியாமல் தவித்துவந்த நிலையில், இருவரும் எப்படி ஜோடி சேர்கிறார்கள் என்பதுதான் சீரியலின் கதைக்களம். இச்சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே இருவருக்கிடையே காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. ஆனால் இவர்களுக்கு காதலுக்கு ஆல்யாவின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழவே, வீட்டைவிட்டு வெளியேறி சஞ்சீவை கரம் பிடித்தார் ஆல்யா.
ஆல்யா மனசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்த பின்னர் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட ஆல்யா, மீண்டும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் 2-இல் தற்போது நடித்துவருகிறார். ஆல்யாவின் கணவர் சஞ்சீவும் விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்த நிலையில், அச்சீரியல் முடிந்ததும், தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் நடித்துவருகிறார். இவர்கள் இவரும் சின்னத்திரை சீரியல் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தனது குட்டிக்குழந்தையுடன் ஷாப்பிங் போவது, குழந்தை செய்யும் சேட்டை என அனைத்தையும் இன்ஸ்டா மற்றும் யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில்தான் ஆல்யாவின் 2-வது குழந்தை டெலிவரி தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதால், தற்காலிகமாக ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியிருக்கிறார்.
View this post on Instagram
முன்னதான தனது குழந்தை அய்லாவின் பிறந்த நாளுக்கு காரை வாங்கினர். இந்நிலையில் மெர்சிடெஸ் சி க்ளாஸ் பென்ஸ் காரை தனது சகோதரர் சமீருக்கு பரிசளித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவ் பதிவிட்டுள்ளார். அதில், அண்ணனுக்கு ஒரு சின்ன பரிசு என்றும், Mercedes குடும்பத்திற்கு வரவேற்கிறோம் சமீர் தம்பி என பதிவிட்டுள்ளார். மேலும் நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த சஞ்சீவ்வின் ரசிகர்கள், பரிசாக நீங்கள் பென்ஸ் கார் அளித்துள்ளீர்களா? ரொம்ப சந்தோஷம் என்ற கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.