மேலும் அறிய

Sangadam Theerkum Saneeswaran: மீண்டும் ஒளிபரப்பாகும் ‘சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்’! பக்தித் தொடர் ரசிகர்கள் தயாராகுங்க!

பிரபல சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் சீரியலை டிசம்பர் 4 முதல் மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். கலர்ஸ் மற்றும் ஸ்வஸ்திக் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளது.

சித்தார்த் குமார் திவாரி இயக்கத்தில், சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் தொடரில் சூர்யதேவரா சலில் அங்கோலாவும், விஷ்ணுவாக திவாகர் புந்திரும், சிவனாக தருண் கன்னாவும், இளம் சனீஸ்வரனாக கார்த்திகேயா மாளவியாவும், அவரது தாயாக ஜூஹி பார்மரும் நடித்துள்ளனர். சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரனின் தயாரிப்பு வடிவமைப்பு அமித் சிங்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் முயற்சியும் இதில் அடங்கும்.

இந்தத் தொடருக்கான செட் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு செட், சனீஸ்வரன் வளரும் காடு போன்று வடிவமைத்து போடப்பட்டுள்ளது. இந்த செட் 25,000 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக போடப்பட்டுள்ளது. இரத்த சிவப்பு வண்ண செட்டால் அசுரர்களின் உலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அசுரர்களுக்கான ஆடம்பரமான ஆடைகள் ஸ்வேதா கோர்டேவால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் மிகவும் சக்திவாய்ந்த கடவுள். ஆனால் அதே நேரத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தெய்வத்தின் வடிவம் ஆவார். சனீஸ்வரன் பிறந்தவுடன் அவரது தந்தை சூர்யதேவரின் கைகளில் அநீதியை எதிர்கொள்கிறார். சனீஸ்வரனின் வாழ்க்கையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும்.

தேவர்கள் மற்றும் அசுர உலகங்களுக்கு இடையே ஒரு நுட்பமான சமநிலையை பேணுவதன் மூலம் அவர் நீதியின் இறுதி வழிகாட்டலாக மாறுவதற்கு இது வழிவகுக்கிறது. சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்னும் பிரம்மாண்டமான கருப்பொருள்களுடன் கூடிய பிரம்மாண்டமான கதைத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான நிலையற்ற உறவு, ஆதிக்கத்திற்கான இறுதிப் போரான ‘தேவஅசுர சங்க்ரமு’-க்கு வழிவகுத்த ஒரு சகாப்தத்துக்கு இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். போர் கடுமையாக மாறும்போது, சிவபெருமான் தலையிட்டு, நன்மைக்கும் தீமைக்கும் இடையே சமநிலையை பராமரிக்கும் ஒரு புதிய ஆற்றலுக்கு திரித்துவம் (ஒன்றில் மூன்று ஐக்கியம்) வழி செய்கிறது என்று அறிவிக்கிறார். இதனால் சனீஸ்வரன் பிறக்கிறார்.

சூர்யதேவருக்கும் அவரது மனைவி சாயாதேவிக்கும் (சூர்யதேவரின் மனைவி சந்தியாவின் நிழல் மூலம் உருவானவர் சாயாதேவி) பிறந்தவர் சனீஸ்வரன். அதாவது ஒளிக் கடவுளான சூர்ய தேவர் மற்றும் சாயா, அவரது மனைவி சந்தியாவின் நிழலுக்குப் பிறந்த குழந்தைதான் சனீஸ்வரன்.
ஆனால் சனி பிறப்பிலேயே தூற்றப்படுகிறார்.

ஒரு காட்டில் சாயாவால் வளர்க்கப்பட சூர்யலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சனி, கர்மாவின் பாதையில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். அவர் வயதாகும்போது, அவர் கடினமான சூழ்நிலைகளில் கூட தயங்காமல் தொடர்ந்து சரியான நீதியை வழங்குகிறார். அவர் உயர்ந்த உண்மைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார். பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களைத் துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். இப்படியாக செல்லும் கதையை மையப்படுத்தி இந்தத் தொடர்ந்து அமைந்துள்ள நிலையில், ரசிகர்களுக்காக மீண்டும் தற்போது ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Embed widget