Sandhya Ragam : மாயாவால் தனத்துக்கு வந்த ஆசை.. ரகுராம் கொடுத்த அதிர்ச்சி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
சந்தியா ராகம் சீரியலின் இன்றைய அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயாவுக்கு புவனேஸ்வரி அனுப்பி வைத்த காஸ்மெட்டிக் பொருட்கள் வந்து சேர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மாயா காஸ்மெட்டிக் பொருட்கள் ஒவ்வொன்றையும் எடுத்து காட்டி அது குறித்து விளக்கி கொண்டிருக்கிறாள். அப்போது ஜிமிக்கியை பார்த்து ஆசைப்பட தனம் அதை அவளுக்கு போட்டுவிட அதை பார்த்த ஜானகி சந்தோஷப்படுகிறாள்.
அடுத்து மாயா நெயில் பாலிஷ் எடுத்துக்காட்ட தனத்திற்கு அதைப்போட்டு கொள்ள வேண்டும் என்ற ஆசை உருவாகிறது, ஒருவேளை அதை போட்டு கொண்ட பிறகு அப்பா பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற பயமும் உருவாக அதை நீக்குவதற்கும் வழி இருப்பதாக நெயில் பாலிஸ் ரிமூவரை எடுத்து காட்டுகிறாள்.
பிறகு தனம் ஆசையாக நெயில் பாலிஷ் போட்டு கொண்டிருக்க ரகுராம் கோவிலுக்கு சென்று ப்ரசாதத்துடன் வீட்டிற்கு வந்து தனத்தை கூப்பிட்ட இந்த சத்தம் கேட்டு அப்பு கையில் வைத்திருந்த நெயில் பாலிஷ் ரிமூவரை கீழே போட்டு விட அது உடைந்துவிடுகிறது. இதனை தொடர்ந்து தனம் கைகளை பின்னாடி மறைத்து கொண்டு அப்பா முன்னாடி செல்கிறாள்.
அவரோ பிரசாதத்தை தொட்டு கும்பிட்டு எல்லாருக்கும் கொடு என்று சொல்ல இவள் செய்வதறியாது தவிக்க அப்பு ப்ராகரஸ் ரிப்போர்ட்டை கொடுத்து திசைதிருப்ப ஒரு வழியாக ரகுராம் கண்ணில் நெயில் பாலிஷ் படாமல் தப்பிக்கிறாள் தனம்.
அதன் பிறகு மாயா கிழிந்தது போன்ற மாடர்ன் உடையில் வெளியே வர பத்மாவும் பார்வதியும் டிரஸ் கிழிந்து இருக்கு இதை போட்டு இருக்க என்று கேள்வி கேட்க மாயா இது மாடர்ன் என்று சொல்லி அவர்களை இடியட் என திட்டுகிறாள். அம்மாவை இடியட் என சொன்னதால் சீனு மாயாவிடம் சண்டைக்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்த அறிய இன்றைய எபிசோட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க