"சமந்தாவின் திரைவாழ்க்கை அவ்வளவுதான்… மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்" சாடும் தயாரிப்பாளர்!
"எல்லா தடவையும் 'செண்டிமெண்ட்' கை கொடுக்காது. பாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் தரக்குறைவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள்," என்றார்.
தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வரும் நடிகை சமந்தாவின் திரைப்பட வாழ்க்கை "முடிந்துவிட்டது" என்று மூத்த தயாரிப்பாளரும் இயக்குனருமான சிட்டிபாபு கூறியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் சமீபத்திய திரைப்படமான சகுந்தலம் அதன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதும், பாக்ஸ் ஆபிஸில் முத்திரை பதிக்கத் தவறியதும் குறிப்பிடத்தக்கது..
அவர் வாழ்க்கை அவ்வளவுதான்
ஒரு சமீபத்திய நேர்காணலில், தயாரிப்பாளர் சிட்டிபாபு, சமந்தா குறித்து சில பரபர செய்திகளை பகிர்ந்துள்ளார். மேலும் "நட்சத்திர நாயகி" என்று பெயர் பெற்ற அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும், இப்போது அவர் தனது திரைப்படங்களை விளம்பரப்படுத்த "கீழ்த்தரமான யுக்திகளை" பயன்படுத்துகிறார் என்றும் கூறினார்.
கிடைத்ததை நடித்து வருகிறார்
“சமந்தா விவாகரத்துக்குப் பிறகு புஷ்பா தி ரைஸ் படத்தில் ஊ சொல்றியா மாமா என்னும் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். சமந்தா வாழ்வாதாரத்திற்காக அதை செய்தார். ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்தை இழந்த அவர், தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார். கதாநாயகியாக அவரது கேரியர் முடிந்துவிட்டதால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு வர முடியாது. அதனால் வரும் ஆஃபர்களை செய்து கொண்டே அவர் தன் பயணத்தைத் தொடர வேண்டியதுதான்,” என்று அவர் கூறியதாக Siasat.com இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழ்த்தரமான ப்ரோமோஷன் வேலைகள் செய்கிறார்
“யசோதா புரமோஷன்களின் போது அவர் மேடையில் கண்ணீர் சிந்தி அந்த அனுதாபம் மூலம் வெற்றி பெற முயன்றார். இப்போது சகுந்தலம் திரைப்படத்திற்கு முன்னால், அவர் இறப்பதற்கு முன் இந்த பாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டதாக கூறி அனுதாபத்தை பெற முயன்றிருந்தார். மேலும் மேலும் வாயிலிருந்து வார்த்தை வராதது போல நடித்தார்" என்று சிட்டிபாபு கூறினார். மேலும் சாகுந்தலம் படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்ததை பார்த்து வியப்படைந்தேன் என்றார்.
படம் நன்றாக இருந்தால்தான் ஓடும்
"எல்லா தடவையும் 'செண்டிமெண்ட்' கை கொடுக்காது. பாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் தரக்குறைவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள். கதாநாயகி அந்தஸ்தை இழந்த சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்திற்கு எப்படி பொருந்தினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு சாகுந்தலம் திரைப்படம் குறித்து எந்த ஆர்வமும் இல்லை," என்று அவர் கூறினார்.
சாகுந்தலம் இயக்குனர் குணசேகர் எழுதி இயக்கிய ஒரு தெலுங்கு மொழி புராணத் திரைப்படம். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடம் இருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தொடங்கின. அனைத்து மொழிகளிலும் சேர்த்தே 5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. 2வது நாளிலும் மோசமான வசூல் செய்து 1.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. 3வது நாளில் ரூ. 2 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.