மேலும் அறிய

IPL Points Table: திக்..திக்..பெங்களூருவில் சென்னை செய்த சம்பவம்.. ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலின் நிலை என்ன?

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

நேற்றைய போட்டி:

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.   சென்னை அணி நிர்ணயித்த 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் மற்றும் டூப்ளெசிஸ் அதிரடியாக அரைசதம் கடந்தனர். இருந்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்காததால் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. இதனால், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
ராஜஸ்தான் 5 4 1 8
லக்னோ 5 3 2 6
சென்னை 5 3 2 6
குஜராத் 5 3 2 6
பஞ்சாப் 5 3 2 6
கொல்கத்தா 5 2 3 4
பெங்களூரு 5 2 3 4
மும்பை 4 2 2 4
ஐதராபாத் 4 2 2 4
டெல்லி 5 0 5 0

முதல் நான்கு இடங்களில் யார்?

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.  

அதேநேரம், லக்னோ, குஜராத் மற்றும் ஆகிய அணிகள் தலா 5 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றுள்ளன. இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 2 மற்றும் 4வது இடங்களை பிடித்துள்ளன. 6வது இடத்தில் இருந்த சென்னை அணி நேற்றைய வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

மற்ற அணிகளின் நிலை:

பஞ்சாப் அணி 3 வெற்றிகளுடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து,  கொல்கத்தா, பெங்களூரு, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முறையே 6  முதல் 9வது இடங்களில் உள்ளன. டெல்லி அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையும் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 

இன்றைய போட்டி:

இன்று  ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் மும்பை அல்லது ஐதராபாத் என எந்த அணி வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் நேரடியாக 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
Embed widget