Samantha | இனி எல்லாம் அப்படித்தான்! சம்பளம் இவ்ளோ! இயக்குநர் இவங்கதான்! ஸ்டிரிக்ட் முடிவெடுத்த சமந்தா!
இந்த இரண்டு படங்களும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. அதே போல நடிகை டாப்ஸி தயாரிக்கும் புதிய இந்தி படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார்.
விவாகரத்திற்கு பிறகான சமந்தாவின் வாழ்க்கை நிறைய மாறுதல்களை சந்தித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத சமந்தாவாக நிறைய நேர்மறை அனுகலை கையாண்டு வருகிறார் சமந்தா. தன் மீதான் வீண் பழி மற்றும் விவாகரத்து விமர்சனங்களை தவிர்த்து வரும் சமந்தா, தான் நண்பர்களுடன் செலவிடம் அழகிய தருணங்கள் , பயணங்கள் குறித்து மட்டுமே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவருக்குமான விவாகரத்திற்கு பிறகு அதிக சமூக சவால்களை சமந்தா மட்டுமே எதிர்க்கொண்டார். முன்னதாக சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்த சமந்தா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டி ஒன்றில் , சினிமாவில் பெண்களின் பங்கு முக்கியம் என வலியுறுத்தி பேசியுள்ளார். ”அதிக அளவில் பெண்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்” என கூறிய சமந்தா நிறைய பெண் எழுத்தாளர் , இயக்குநருடன் பணியாற்ற தனக்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அது அவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சமந்தா ‘ஓ பேபி ‘ என்ற திரைப்படத்தில் நந்தினி ரெட்டி என்னும் பெண் இயக்குநருடன் பணியாற்றியிருந்தார். மேலும் பல பெண் இயக்குநர்களுடன் அவர் பணியாற்ற விருப்பம் இருப்பதை அந்த பேட்டியின் பொழுது வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
சமந்தா தற்போது தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதே போல ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் பை லிங்குவல் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. அதே போல நடிகை டாப்ஸி தயாரிக்கும் புதிய இந்தி படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.சமந்தா தற்போது சில வெப் தொடரிலும் கமிட்டாகவுள்ளாராம். அந்த வகையில் பல இயக்குநர்கள் சமந்தாவின் கால்ஷீட்டிற்காக காத்திருப்பதால் தனது சம்பளத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளாராம். அதன் அடிப்படையில் சமந்தாவின் சம்பளம் 4 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.