![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
samantha | new year wishes | ”ஒவ்வொரு நாளும் சாதித்த நாள்தான்.. கொண்டாடுங்கப்பா!” - சமந்தாவின் வேற லெவல் புத்தாண்டு வாழ்த்து !
”அது சிறு படியாக இருந்தாலும் எதற்காக மாறுகிறீர்கள், இது எதற்கான படி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.”
![samantha | new year wishes | ”ஒவ்வொரு நாளும் சாதித்த நாள்தான்.. கொண்டாடுங்கப்பா!” - சமந்தாவின் வேற லெவல் புத்தாண்டு வாழ்த்து ! Samantha has a 'powerful' message for all on New Year 2022; Find out HERE samantha | new year wishes | ”ஒவ்வொரு நாளும் சாதித்த நாள்தான்.. கொண்டாடுங்கப்பா!” - சமந்தாவின் வேற லெவல் புத்தாண்டு வாழ்த்து !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/01/3d7e27d21e4239e741a2a6d20ce79488_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
”ஹாப்பி நியூ இயர்...ஹாப்பி நியூ இயர் வந்ததே” என பலரும் சமூக வலைத்தளங்களில் 2022 ஆம் ஆண்டின் முதல்நாளை புகைப்படங்களை பதிவேற்றியும் , நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்தும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல நட்சத்திரங்கள் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளில் முகாமிட்டிருந்தாலும் சிலர் இன்ஸ்பரேஷனான பதிவுகள் மூலம் கவனம் பெறுகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா தனது செல்ல நாய்க்குட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து தனது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
சமந்தா தனது வாழ்நாளில் சந்திக்காத பல இன்னல்களை கடந்த ஆண்டில் சந்தித்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரிந்ததே. ஆனாலும் தன்னை நேர்மறையாகவே வெளிப்படுத்தும் சமந்தா தனது இன்ஸ்டா புத்தாண்டு வாழ்த்து செய்தியில் “ இவ்வளவு நாட்களை கடந்திருப்பதே கடந்த வருடத்தின் மிகப்பெரிய சாதனை. ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் எதையுமே செய்ய விரும்பவில்லை என்றாலும், அந்த நாளின் காலையில் நாம் உயிரோடு இருப்பதும் கூட கொண்டாடக்கூடிய ஒன்றுதான். உங்களுக்கு நம்பிக்கை தரும் விஷயங்களை, ஆறுதல் தரும் விஷயங்களை முதலில் தேடுங்கள். உங்களுக்கு நீங்கள் மென்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை நீங்கள் முன்னேறும் பொழுதும், அது சிறு படியாக இருந்தாலும் எதற்காக மாறுகிறீர்கள், இது எதற்கான படி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் ..2022..பலமானது...பிரம்மாண்டமானது...மென்மையானது ..” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். முதலில் நயன் தாரா விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
அடுத்ததாக தெலுங்கில் ஹீரோயினை மையமாக வைத்து உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். இதுவும் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. அடுத்ததாக தமிழ் , தெலுங்கு மொழிகளில் உருவாகும் பை-லிங்குவல் திரைப்படமான யசோதா திரைப்படத்தில் நாயகியாக நடிக்க , இவருக்கு வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இது தவிர ஹாலிவுட்டின் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார். ஃபிலிம் ஜான் இயக்கும் ஆர்க்யூமெண்ட்ஸ் ஆஃப் லவ் என்னும் திரைப்படத்தில் இருபாலின ஈர்ப்பாளராக நடிக்கிறார். ஃபேமிலி மேன் இயக்குநரகள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு சமந்தாவிற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)