Salaar vs KGF 2: ராக்கி பாய் இறந்த அதே நேரம் 5:12 .. வெளியாக இருக்கு சலார் டீஸர்.. KGF சீக்ரெட் என்ன தெரியுமா?
கே.ஜி.எஃப் படத்திற்கும் சலார் திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் என்ன. இயக்குநர் பிரஷாந்த் நீல் சொல்ல வரும் மெசேஜ் என்ன
கே.ஜி.எஃப் திரைபப்டத்தின் இரண்டு பாகங்களை இயக்கி இந்திய சினிமாவின் டிரெண்ட் செட்டராக உருவான பிரஷாந்த் நீல் தற்போது இயக்கியிருக்கும் படம் சலார். பாகுபலி பிரபாஸ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். அனைவரும் கே. ஜி.எஃப் மூன்றாம் பாகத்தை ஆவலாக எதிர்பார்த்துவரும் இந்த நேரத்தில் சலார் திரைப்படத்தை பிரஷாந்த் நீல் எடுப்பதற்கான காரணம் என்ன. சலார் திரைப்படத்திற்கும் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்திற்கு நிச்சயமாக முக்கியமான ஒரு தொடர்பு இருக்கிறது என்பது மட்டும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
அது என்ன 5 ; 12 மணி
சலார் திரைப்படத்தின் டீஸர் ஜூலை 6 ஆம் தேது வெளியாக இருக்கிறது. வழக்கமான ஒரு சமயத்தில் இல்லாமல் இந்தப் படத்தின் டீஸர் அதிகாலை 5 மணி 12 நிமிடத்திற்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. சரி ஏதோ நேரம் காலம் பார்த்து இந்த நேரத்தில் டீஸர் வெளியிடுகிறார்கள் என்று நினைத்தால் கே.ஜி.எஃப் படத்தின் தீவிர ரசிகர்கள் அந்தப் படத்தில் க்ளைமேக்ஸுக்கும் இந்த நேரத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மெசேஜ் கொடுத்த இயக்குநர்
கே.ஹி.எஃப் இரண்டாம் பாகத்தின் கடைசியில் கதாநாயகன் ஒரு கப்பலில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரது கப்பல் தண்ணீருக்குள் மூழ்குகிறது. அந்தக் கப்பலில் ஒரு கடிகாரம் காட்டப்படுகிறது . அந்த கடிகாரத்தில் காட்டும் நேரம் 5 : 12 அதே மாதிரி சலார் திரைப்படத்தில் டீஸர் வெளியிடப்படும் நேரமும் 5:12 என்று அறிவத்து ரசிகர்களுக்கு ஏதோ மெசேஜ் சொல்ல வருகிறார் படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.இந்தத் தகவல்கள் சலார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகமாக்கி இருக்கின்றன.
#Salaar #KGF #Prabhas 5:12 AM is the time Rocky Bhai gets attacked in KGF-2 climax and it’s the teaser time of Salaar 🔥🔥 . Mother of all collisions Salaar is coming up 🔥🔥🔥. Salaar 🚢 Kgf #Prabhas #Yash @hombalefilms#salaarbhaicoming pic.twitter.com/KduNGXoGAB
— NANI CAMERON ™ (@Nani____3) July 3, 2023
பிரபாஸ்
ஆடிபுருஷ், சாஹோ என தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் பிரபாஸிற்கு பிரஷாந்த் நீலின் சலார் கைக்கொடுக்கலாம். அதுமட்டுமில்லாமல் கே.ஜி.எஃப் 1 மற்றும் 2, காந்தாரா ஆகிய வெற்றி படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் இப்படத்தின் கதையை நம்பி தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இதன் மீது பெரும் எதிர்ப்பார்ப்பும் உள்ளது. சலார் படத்தைத் தொடர்ந்து மற்றுமொரு பெரிய பட்ஜட் படத்தில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ்.