மேலும் அறிய

KGF 3: ராக்கி பாய் 16 நாடுகளில் செய்த சாகசங்கள்... கே.ஜி.எஃப் 3ஆம் பாகத்தின் கதை இதுதான்!

அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளில் ராக்கி பாயின் சாகசங்களை மையமாக வைத்து உருவாகிறது கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம்!

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கே.ஜி.எஃப்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவை உலக அளவில் பேசவைத்தது. இந்தப் படத்தில் ராக்கி பாயாக நடித்த நடிகர் யஷ் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப்  2’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 2 பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை செய்து சுமார் 1,200 கோடியை வசூலித்தது.

கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ் மற்றும் சரண் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தினை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது மூன்றாம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்று இணையதளத்தில் விவாதித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

கே.ஜி.எஃப் 3

இயக்குநர் பிரஷாந்த் நீல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்க இருப்பதாகவும், 2025ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் படம் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் கதைப்படி 1978 முதல் 1981 ஆண்டில் ராக்கி பாய் அமெரிக்கா மற்றும் மேலும் 16 நாடுகளில்  செய்த சாகசங்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும் இணையதளத்தில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் சலார் திரைப்படத்திற்கும் கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பிருக்கும் என்கிற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் இந்த வரிசையில் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சலார்

பிரஷாந்த் நீல் இயக்கி பிரபாஸ் நடித்திருக்கும் திரைப்படம் சலார். ஷ்ருதி ஹாசன், பிருத்விராஜ் ஜெகபதி பாபு இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம்,  செப்.28 வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பின் பல்வேறு காரணங்களால் படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Shocking Video: பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Embed widget