sai pallavi: ”ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் சைட் அடிப்பேன் “ - சாய் பல்லவி ஓபன் டாக் !
மருத்துவம் என்பது ஒரு சேவை அதனை நான் கடமைக்காக படிக்கவில்லை முழு ஈடுபாட்டுடன் படித்தேன் என்னும் சாய் பல்லவி முதல் பார்வையில் காதல் மலருவதில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்கிறார்.
சாய் பல்லவி :
நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
விரைவில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் கார்க்கி திரைப்படம் வெளியாகவுள்ளது.
View this post on Instagram
”பெண்களைத்தான் சைட் அடிப்பேன்”
நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும் . பள்ளியில் ஆவரேஜ் மாணவியாக இருந்த சாய் பல்லவி , கல்லூரியில் டாப் ஸ்டூடண்ட் என்கிறார். மருத்துவம் என்பது ஒரு சேவை அதனை நான் கடமைக்காக படிக்கவில்லை முழு ஈடுபாட்டுடன் படித்தேன் என்னும் சாய் பல்லவிக்கு முதல் பார்வையில் காதல் மலருவதில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்கிறார். மேலும் ஆண்களை காட்டிலும் பெண்களைத்தான் சாய் பல்லவி அதிகம் ரசிப்பாராம் , குறிப்பாக அவர்கள் என்ன உடை அணிந்திருக்கிறார்கள் , அவர்களின் கண்கள் எப்படி இருக்கிறது, கூந்தல் எப்படி இருக்கிறது என தனது தங்கையோடு சேர்ந்து நோட்டமிடுவாராம். இப்போதும் கூட சாய் பல்லவியின் தங்கை ஏதாவது ஒரு பெண்ணின் கூந்தல் அழகாக இருந்தால் அதனை சாய் பல்லவிக்கு புகைப்படம் எடுத்து அனுப்பி வைப்பாராம். இதனை அவரே நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram
துணிச்சல் பெண் :
சாய் பல்லவி அவ்வபோது தனக்கு மனதில் பட்டதை துணிச்சலாக பேசக்கூடிய பெண். அப்படித்தான் அவர் சமீபத்தில் பேசிய கருத்து சர்ச்சையானது. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் “ என்னை பொருத்தவரை வன்முறை என்பது ஒரு தவறான விஷயம். நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதெல்லாம் நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான். அதே சமயம் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவது, மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியரை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது ஆகிய இரண்டுமே ஒன்றுதான்” என தெரிவித்திருந்தார். இது ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.