வங்க கவி தாகூரின் உறவுக்காரரா சைஃப் அலிகான்..! இது தெரியாம போச்சே
பிரபல பாலிவுட் நடிகர் புகழ்பெற்ற வங்க கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் வம்சாவளி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

சைஃப் அலி கான்
நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவிக்கு சொந்தமான பாந்த்ரா இல்லத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையே உலுக்கியுள்ளது. தனது வீட்டின் உள்ளே நுழைந்த கொள்ளையரை சைஃப் அலிகான் பார்த்துள்ளார். அப்போது, இந்த கொள்ளை முயற்சியை அவர் தடுக்க முற்பட்டபோது இந்த கத்திக்குத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 2.30 மணியளவு இந்த கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சைஃப் அலிகானை கத்தியால் குத்திய பிறகு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறுவை சிகிச்சைக்குப் பின் சைஃப் அலிகான் ஆபத்தான கட்டத்தைத் கடந்துள்ளதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள லீலாவதி மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சல்மான் கானின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின் இந்த நிகழ்வு மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாகூரின் சொந்தக்காரர் சைஃப் அலிகான்
சைஃப் அலி கானை பலர் பிரபல கபூர் குடும்பத்தின் மருமகன் , நடிகர் என அடையாளப்படுத்தினாலும் தனக்கென பெரிய வரலாற்று பின்னணியை கொண்டவர் அவர். சைஃப் அலி கானின் தாத்தா போபாலின் நவாபாக இருந்தவர். சைஃபின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி ஆவார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். சைஃப் அலிகானின் அம்மா பிரபல நடிகை ஷர்மிலா தாகூர். இவர் வங்க கவி ரனிந்திரநாத் தாகூரின் வழிவந்தவர். ஒரு பக்கம் நடிகர் சைஃப் அலிகான் தாகூருக்கு சொந்தக்காரர் இன்னொரு பக்கம் அவர் பிரபல உருது கவி மிர்ஸா காலிபின் உறவுக்காரர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

