Shankar Dayal: பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியில் மாரடைப்பு – 'சகுனி' பட இயக்குநர் அதிர்ச்சி மரணம்!
Shankar Dayal Death: கார்த்தி நடித்த 'சகுனி' படத்தின் இயக்குநர் சங்கர் தயாள், பத்திரிகையாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இயக்குநர் சங்கர் தயாள் மரணம்:
நடிகர் கார்த்தி நடிப்பில் திரைக்கு வந்த படம் சகுனி. இயக்குநர் சங்கர் தயாள் இயக்கிய இந்த படத்தில் கார்த்தி, சந்தனம், பிரகாஷ் ராஜ், பிரணிதா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ரோஜா, நாசர், கிரண் ரத்தோட், மனோபாலா, ராதிகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'சகுனி'.
இந்த படத்தின் இயக்குனர் சங்கர் தயாள். 12 வருடங்கள் கழித்து 'கேஎம்கே' அதாவது குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். செந்தில், யோகி பாபு, சரவணன், ராகுல், லிசி ஆண்டனி ஆகிய பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில் அருண் குமார் சம்மந்தம் மற்றும் சங்கர் தயாள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சங்கர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இயக்குனர் சங்கர் தயாளுக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சங்கர் தயாளுக்கு 47 வயதே ஆகிறது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

