Sabanayagan Trailer: சபாநாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது... காதல் காட்சிகள் அப்ளாஸ் பெறுமோ?
நடிகர் அசோக் செல்வனின் சபா நாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
தமிழில் 'சூதுகவ்வும்' படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்தது. அண்மையில் அசோக் செல்வன் , சரத்குமார் நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். இத்திரைப்படத்தில், நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், வியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.
இன்று மாலை சபாநாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ”அதில் அசோக் செல்வன் மச்சி நம்ம தகுதிக்கு மீறின பொண்ண பார்த்தாலே பிரச்சனை தான். அதனாலதான் தலைவர் அப்போவே சொல்லி இருக்காரு நீ விரும்புன பொண்ண விட உன்னை விரும்புற பொண்ண பாருன்னு. அதற்கு அவரின் நண்பர், நம்மல தான் யாரும் விரும்பலையே என கூற, அதற்கு அசோக் செல்வன் முகத்தில் அதிர்ச்சியாவதைப் போல் ரியாக்ட் செய்கிறார். வேறொரு காட்சியில் நீ எதாவது பொண்ண லவ் பன்றியா இல்லையா? என அசோக் செல்வனிடம் சீனியர் மாணவர் கேட்க, அதற்கு அசோக் செல்வன், ”நம்ம வாழ்க்கையில எங்கண்ணா அந்த நல்ல விஷயம் நடக்குது” என பதில் சொல்கிறார். மேலும் அசோக் செல்வன் ஒரு பெண்ணிடம் நான் கொஞ்சம் ஷை டைப் என சொல்வது போன்ற டயலாக் இடம் பெற்றுள்ளது. மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஒரு காட்சியில் அசோக் செல்வனிடம் இதெல்லாம் நம்புற மாதிரியே இல்லையே என கலாய்க்கிறார். அதற்கு அசோக் செல்வன் சார் உண்மையை தான் சார் சொல்றேன் என்கிறார்.
அசோக் செல்வனிடம் நாயகிகளில் ஒருவர் ப்ரபோஸ் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் அசோக் செல்வனிடம் அவரின் சீனியர், ”அவ உன் கூட இருக்கும் போது பாடிலேங்குவேஜ் எப்படி இருக்கும்? பக்கமா சாய்வாளா? உதட்டை கடிப்பாளா?” என கேட்கிறார். அதற்கு அசோக் செல்வன், “அக்கா என்ன சிம்பு ரேஞ்சுக்கு பேசுறிங்க, அந்த அளவுக்குலாம் இன்னும் போகலக்கா” என கூறுகிறார். அந்த பெண் டேய் நான் அவ உதட்டை கேட்டேன் என பதில் கூறுகிறார்.
மேகா அகாஷ் அருகில் நின்றிருக்கிறார். அப்போது அசோக் செல்வனிடம் அவரின் நண்பர் வேணாண்டா சபா இப்போதான டா சொன்ன ஏதோ தகுதிகிகுதினு, தலைவர் சொன்னாருனுலாம் சொன்னியே டா என கேட்க. நான் இப்போ கமல் ஃபேண்டா என அசோக் செல்வன் கூறுகிறார். கடசியாக அப்பு கமல் வேடத்தில் அசோக் செல்வன் நடந்து வருகிறார். இத்துடன் ட்ரெய்லர் நிறைவு பெறுகிறது.
இப்படத்தில் காதல் காட்சிகளுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.