RRR OTT Release: ஓடிடியில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்.. யார் வாங்கியது? வெளியாகும் தேதி என்ன? - முழுவிவரம் உள்ளே..!
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வருகிற மே 20 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப்படம் உலகம் முழுக்க 1,127 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்(RRR) 1920ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகி இருந்தது.
View this post on Instagram
படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்தனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.