'இது யோசித்து எடுத்த முடிவு..' ரோஜா சீரியல் நாயகன் கொடுத்த ஷாக் நியூஸ்!
ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அதில் அர்ஜூன் கதாபாத்திரத்தில் நடித்தி சிபு சூர்யன் அறிவித்துள்ளார். இது ரோஜா சீரியல் ரசிகர்கள் மற்றும் சிபுவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அதில் அர்ஜூன் கதாபாத்திரத்தில் நடித்தி சிபு சூர்யன் அறிவித்துள்ளார். இது ரோஜா சீரியல் ரசிகர்கள் மற்றும் சிபுவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோஜா, சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
இதில் நாயகனாக நடிக்கும் சிபு சூர்யனுக்கும், நாயகியாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு. இந்த ஜோடிக்காகவே இந்த சீரியலைப் பார்க்கும் பெண்கள் அதிகம். ஆனால், அத்தனை பேருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் சிபு சூர்யன். ஆம் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இத்தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சிபுவின் இன்ஸ்டா பதிவு:
உங்கள் அனைவரிடமும், நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன் என்ற தகவலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் மாதத்துடன் எனது சூட்டிங்கை நிறுத்திக் கொள்கிறேன். இந்த முடிவை நான் ஆழ்ந்து யோசித்து பரிசீலித்து எடுத்துள்ளேன். நான் ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன்.
ஒரு விஷயத்திற்கு இப்படி பிரியாவிடை சொல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சில நேரங்களில் அது தவிர்க்க முடியாதது. ரோஜா சீரியலில் எனது அர்ஜூன் கதாபாத்திரம் என்றும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும்.
View this post on Instagram
உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், அளவில்லாத அன்பிற்கும் நன்றி. நீங்கள் இல்லாவிட்டால் நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க மாட்டேன். நான் உங்களை தொடர்ந்து ரசிக்க வைப்பேன். இன்னும் பல சுவாரஸ்யமான நாடகங்களில் உங்களை சந்திக்கிறேன். உங்களின் அன்பு, ஆதரவும், ஆசியும் என்றென்றும் வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ரோஜா சீரியல் நடிகரின் அறிவிப்பு சீரியலுக்கான வரவேற்பை குறைக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே ஆயிரம் எபிஸோடை தாண்டிச் செல்வதால் சீரியலை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன. அதனால் சிபு விலகலோடு சீரியலுக்கு சுபம் போடப்படுமா என்பதைப் பொறுத்திருந்த பார்ப்போம். ரோஜா முடிந்தாலும் அதன் வாசம் குறையாது. என்று சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருக்கும்.