மேலும் அறிய

Leo Issue: ”சம்பளம் கொடுத்தாச்சு” .. டான்ஸர் சொல்றது தவறான தகவல்.. லியோ பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..!

லியோ படத்தில் நடனம் ஆடியதற்காக சம்பளம் வழங்கவில்லை என டான்ஸர்கள் சிலர் காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த நிலையில், அந்த சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

லியோ படத்தில் நடனம் ஆடியதற்காக சம்பளம் வழங்கவில்லை என டான்ஸர்கள் சிலர் காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த நிலையில், அந்த சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ள “லியோ” படம், வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் த்ரிஷா,அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

இதனிடையே கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தில் இருந்து “நா ரெடி” பாடல் வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய், ராப் பாடகர் அசல் கோலார் இருவரும் பாடியிருந்தனர். யூட்யூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்த இப்பாடலில் கிட்டதட்ட 1400க்கும் மேற்பட்ட குரூப் டான்ஸர்களோடு விஜய் நடனமாடியுள்ளார். பாடலில் சில காட்சிகள் காட்டப்பட்டிருந்தாலும் திரையில் இப்பாடலை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக சம்பவம் ஒன்று நடைபெற்றது. 

இப்பாடலில் நடனம் ஆடிய 1300 கலைஞர்களுக்கு உரிய சம்பவளம் வழங்கப்பட வில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. பாடல் படப்பிடிப்பு முடிந்து 4 மாதங்களாகியும் சம்பளம் வழங்கப்படவில்லை, தயாரிப்பு நிறுவனம் மற்றும் யூனியன் தரப்பு தங்களை அலைய வைப்பதாக தெரிவித்திருந்தனர். படம் வெளியாவதற்குள் அந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இப்படியான நிலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கமான பெஃப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ இன்று சில காணொலிகளில் "லியோ” திரைப்படத்தில் நடன காட்சியில் பங்குப்பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம். ”லியோ” திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் திரு.லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் திரு.தினேஷ் மாஸ்டர் அவர்கள் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். ஏனெனில், அதிகபட்சமாக 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

இதுபோன்று அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் / பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்தும் படமாக்குவது வழக்கம். இவர்கள் ரிச் பாய்ஸ் / ரிச் கேர்ள்ஸ் என்றோ மாடல்ஸ் என்றோ உறுப்பினர் அல்லாதவர் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ் (Conveyance) உட்பட 1,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த "லியோ" திரைப்படத்தில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள ஆதி ஸ்ரீராம்" ஸ்டுடியோசில் கடந்த ஜீன் மாதம் 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750/- வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.

தற்போது, ஒரு வேண்டும் என சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!
Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்ற நினைக்கும் ரவுடி மனைவி.. சவால் விடும் சுப்புலட்சுமி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்ற நினைக்கும் ரவுடி மனைவி.. சவால் விடும் சுப்புலட்சுமி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karunas: மக்களுக்கு உழைச்சேன்.. மாமா, மச்சான்னு தரம் தாழ்ந்து பேசிட்டாங்க.. கருணாஸ் வேதனை!
Karunas: மக்களுக்கு உழைச்சேன்.. மாமா, மச்சான்னு தரம் தாழ்ந்து பேசிட்டாங்க.. கருணாஸ் வேதனை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Brics: 5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
பென்ஷன் வராமல் அல்லல்படும் முதியவர்கள்.. செப்டம்பர் மாத பணம் எப்போது கிடைக்கும்? - வெளியான தகவல்!
பென்ஷன் வராமல் அல்லல்படும் முதியவர்கள்.. செப்டம்பர் மாத பணம் எப்போது கிடைக்கும்? - வெளியான தகவல்!
JCD Prabhakar:
JCD Prabhakar: "சாதி, மதம் எதுவுமே கேட்கல.. எல்லாமே விஜய்தான்.. அதைத்தாண்டி ஒன்னுமில்ல.." சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நெகிழ்ச்சி
விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
TN Govt Job: 4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள் - தகுதி, வயது வரம்பு, ஊதியம் - முழு விவரங்கள் இதோ
4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள் - தகுதி, வயது வரம்பு, ஊதியம் - முழு விவரங்கள் இதோ
CM Vijay: முன்னாள் தலைமை செயலாளர் உதயநிதி அரெஸ்டில் உதவினாரா? IPS மாற்றம், புதிய பதவி - விஜய் ப்ளான்
முன்னாள் தலைமை செயலாளர் உதயநிதி அரெஸ்டில் உதவினாரா? IPS மாற்றம், புதிய பதவி - விஜய் ப்ளான்
Embed widget