Singapore Saloon: மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘சிங்கப்பூர் சலூன்’.. படம் எப்போ ரிலீஸ் தெரியுமா.. வெளியானது அறிவிப்பு!
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வானொலி பண்பலை தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகராக, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அரசியல் காமெடி படமான எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஆர்.ஜே.பாலாஜி. இதனையடுத்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அப்படத்தில் முதன்மை வேடத்திலும் நடித்திருந்தார். பின்னர் கடந்த ஜூன் மாதம் வெளியான வீட்ல விஷேசம் படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்தப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி அதற்காக ஒன்றரை மாதங்கள் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
View this post on Instagram
தொடர்ந்து தனது படங்களின் வெற்றியால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ள ஆர்.ஜே.பாலாஜி - பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகிய இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்குவதால் 100% எண்டெர்டெயின்மென்ட் கேரண்டி என பலரும் தெரிவித்துள்ளனர்.
பெரும் பொருட்செலவில் தயாராகும் சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபலமான நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்றும், இத்திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் தகவல் வெளியாகியுள்ளது.