Rithika Singh Viral Video : அந்தர் பல்டி அடித்து அசரவைக்கும் இறுதிச்சுற்று ரித்திகா.. வைரலாகும் ஜிம் வீடியோ
இறுதிச்சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக இன்ட்ரோவான ரித்திகா சிங். இவர் ஜிம்மில் தீவிரமாக உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறுதிச்சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக இன்ட்ரோவான ரித்திகா சிங். இவர் ஜிம்மில் தீவிரமாக உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
குத்துச் சண்டை நடிகையாக இருந்த ரித்திகா சிங்கை இயக்குநர் சுதா கொங்கரா தான் நடிகையாக மாற்றினார். இறுதிச் சுற்று அறிமுக திரைப்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருப்பார்.
சுதா கொங்கரா பற்றி ஒரு பேட்டியில் ரித்திகா, என் வாழ்க்கையை முழுமையாக மாற்றியவர் அவர். நான் இப்படி உங்கள் முன் பேட்டியெல்லாம் கொடுப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அதுதான் வாழ்க்கை. எப்போதுமே என்னால் ஒரு இடத்தில் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது. தினம் தினம் புதுமையான விஷயங்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படித்தான் பாக்ஸிங், நடிப்பு எல்லாவற்றையும் பார்க்கிறேன். அதனால் எதையும் மிஸ் பண்ண மாட்டேன். முக்கியமா நல்ல இயக்குநர்களை என்று கூறியிருப்பார்.
ரித்திகா ஒரு ஃபிட்நஸ் ஃப்ரீக். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது பயிற்சி வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். ஒரு முறை ஃபிட்நஸ் பற்றிய கேள்விக்கு, நல்லா சாப்பிடுவேன். அதே நேரத்தில் எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வேன் பிட்னெஸுக்காக சாப்பாட்டைக் குறைக்கிற விஷயம் எல்லாம் எனக்குச் சரி வராது. இரண்டையும் சரிசமமாக பார்த்துக்கொண்டால் போதும் என்று கூறியிருந்தார்.
அண்மையில், இவர் ஜிம்மில் தீவிரமாக உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுபோல் கிராமத்துப் பெண்ணாக நடிக்க வேண்டும். அதுவும் நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தால்தான் ஏற்பேன். விரும்பிக் கற்றுக்கொண்ட பாக்ஸிங் விளையாட்டு அனுபவங்களைக் கதையாக எழுதும் எண்ணமும் உள்ளது. நேரம் கிடைக்கும்போது எழுதுவேன் என்று ரித்திகா ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

