Bruce Willis: மனைவி, பிள்ளைகள்கூட நினைவில் இல்லை.. பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
Bruce Willis : பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ் தனது நினைவாற்றலை இழந்து வருகிறார். அவரின் உடல் நிலை மோசமாகி வருவதை எண்ணி அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
டை ஹார்ட், லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங், ஆர்மகெட்டான், தி சிக்ஸ்த் சென்ஸ் ஒரு பல ஹாலிவுட் ஹிட் படங்களில் நடித்தவர் பிரபலமான நடிகர் வால்டர் புரூஸ் வில்லிஸ். ஆக்ஷன் ஹீரோவாக தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் இன்று மிகவும் மோசமான ஒரு நிலையில் உள்ளார் என்ற தகவல் வெளியாகி அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஃபாசியா பாதிப்பு :
68 வயதாகும் நடிகர் புரூஸ் வில்லிஸுக்கு அறிவாற்றல் திறனை பாதிக்கும் ஒரு வகை நோயான அஃபாசியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்று கொள்வதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இது குறித்து புரூஸ் வில்லிஸ் மனைவி எம்மா ஹெமிங் வில்லிஸ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். "இந்த சவாலான நேரத்தில் புரூஸ் வில்லிஸ் மீது தொடர்ந்து அவரது ரசிகர்கள் கொண்ட அன்பு, இரக்கம் மற்றும் ஆதரவை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். உங்கள் அனைவரையும் நாங்கள் எங்களுடைய குடும்பமாகவே பார்க்கிறோம். அவரும் உங்கள் மீது அதே அன்பை கொண்டுள்ளார்" என தெரிவித்து இருந்தார் எம்மா.
முன்னாள் மனைவியின் வருத்தம் :
புரூஸ் வில்லிஸ் உடல் நிலையில் மோசமாக இருக்கும் இந்த வேலையில் அவரின் முன்னாள் மனைவி டெமி மூரே கூறியுள்ள தகவலின் படி புரூஸ் வில்லிஸ், டெமி மூரேவையும் அவருடைய ஐந்து குழந்தைகள் குறித்த நினைவுகளை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவருடனான 13 ஆண்டு கால திருமண வாழ்க்கை கூட அவரின் நினைவில் இல்லை என்றும் அந்த அளவிற்கு புரூஸ் வில்லிஸ் உடல்நிலை மோசமைடைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் புரூஸ் வில்லிஸ் தான்னுடைய பேசும் திறனை இழந்தார். அதனை தொடர்ந்து நினைவாற்றலை இழந்து விட்டார். அது மட்டுமின்றி தீவிர புத்தக வாசிப்பாளரான புரூஸ் வில்லிஸ் படிக்கும் திறனையும் இழந்துவிட்டார் என்பது அவரின் குடும்பத்தில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு காலகட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிய புரூஸ் வில்லிஸ் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதை நினைத்து அவரின் தீவிர ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். புரூஸ் வில்லிஸ் மனைவியும், மாடல் அழகியுமான 45 வயதான எம்மா ஹெமிங் வில்லிஸ் கணவரின் இந்த நோய் குறித்து கண்டறியப்பட்டதில் இருந்து இந்த பயங்கரமான நிலை குறித்து விழிப்புணவை ஏற்படுத்தி வருகிறார்.