மேலும் அறிய
65 ஆண்டுகால இசைப்பயணம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியின் சிம்மக்குரல்: டி.எம்.சௌந்தரராஜனின் 102ஆவது பிறந்த தினம்!
T. M. Soundararajan: தன்னுடைய 24 வயதில் பாடத் தொடங்கி, 88 வயதில் கடைசி பாடலை பாடிதிரைத்துறையில் தன்னிகரில்லா பாடகராக ஜொலித்த டி.எம்.எஸ் பிறந்ததினம் இன்று.
![65 ஆண்டுகால இசைப்பயணம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியின் சிம்மக்குரல்: டி.எம்.சௌந்தரராஜனின் 102ஆவது பிறந்த தினம்! Remembering Play back singer T M Soundararajan on his 102 birthday 65 ஆண்டுகால இசைப்பயணம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியின் சிம்மக்குரல்: டி.எம்.சௌந்தரராஜனின் 102ஆவது பிறந்த தினம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/24/898f9ecb34bb0956bc7118e65be3e0201711250242743224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி.எம். சௌந்தராஜன் பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா தெய்வக் குரலோன் டி.எம். சௌந்தராஜனின் 102வது பிறந்ததினம் இன்று. இன்றைய தினத்தில் அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
- இசை சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன், பாடகர் திலகம், குரலரசர் இப்படி பல பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட டி.எம்.எஸ் ஒரு சௌராஷ்டிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்.
- எஸ்.வி. சுப்பையா நாயுடு இசையில் 1946ஆம் ஆண்டு வெளியான 'கிருஷ்ணாவிஜயம்' படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். ராதே நீ என்னை விட்டு போகாதேடி... தான் அவரின் குரலில் ஒலித்த முதல் திரைப்பாடல்.
- 1954ஆம் ஆண்டு சிவாஜியின் நடிப்பில் வெளியான 'தூக்குத்தூக்கி' படத்தில் இடம்பெற்ற எட்டு பாடல்களையும் டி.எம்.எஸ் தான் பாடி இருந்தார்.
- எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டோருக்கு அதிக அளவிலான பாடல்களை பாடியுள்ளார்.
- திரையிசை பாடல்கள் மட்டுமின்றி பக்தி பாடல்கள், கர்நாடிக் பாடல்கள், லைட் மியூசிக் என 10,000க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் 3,000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். தன்னுடைய 24 வயதில் பாடத் தொடங்கிய டி.எம்.எஸ் 88 வயதில் கடைசி பாடலை பாடினார்.
- அழகென்ற சொல்லுக்கு முருகா... உள்ளம் உருகுதையா என பல பக்தி பாடல்களை பாடி பக்தர்களின் உள்ளங்களை உருக வைக்க கூடியவர்.
- டி.எம்.எஸ். தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் தனி சிறப்புமிக்கது. 65 ஆண்டுகாலமாக திரைத்துறையில் பாடகராக ஜொலித்தவர் டி.எம்.எஸ்.
- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வரிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'செம்மொழியான தமிழ் மொழியாம்...' பாடலில் கூட டி.எம்.எஸ் குரல் ஒலித்தது.
- எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற இரு ஜாம்பவான்களின் அடையாளமாக விளங்கிய பாடல்கள் அனைத்தையும் பாடியவர் டி.எம்.எஸ் தான். யாருக்காக பாடினாலும் அந்த நடிகரே பாடுவது போன்ற உணர்வை கொடுப்பது டி.எம்.எஸ் தனிச்சிறப்பு.
- 65 ஆண்டுகள் பாடல்கள் பாடியவர். எத்தனை மொழிகளில் பாடி இருந்தாலும் தமிழ் மொழி தான் அவருக்கு போரையும் புகழையும் பெற்று தந்தது.
- அருணகிரிநாதர் என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.
- தியாகராஜ பாகவதர் வாழ்நாள் சாதனையாளர் விருது, பெல்ஜியத்தின் கவுரவ டாக்டர் பட்டம், தமிழக முதல்வர் மு. கருணாநிதி விருது, முதல்வர் ஜெயலலிதா அங்கீகார விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
- உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.எம். எஸ், 2013ஆம் மே மாதம் 19ம் தேதி சிகிச்சைப் பலனின்றி தனது 90 வயதில் காலமானார்.
- பாடலைக் கேட்டதும் இது டி.எம்.எஸ் பாடிய பாடல் என உடனே அடையாளம் காணக்கூடிய வகையில் அவரின் பாடல்கள் இருப்பது தனி சிறப்பு.
- மென்மையான குரல் வளம் தான் சினிமாவில் ஈடுபடும் என்ற நம்பப்பட்ட இந்த திரையுலகில் தனது கணீர் குரலால் அனைத்து நம்பிக்கைகளையும் தவிடு பொடியாக்கி அரை நூற்றாண்டுகளாக கோலோச்சிய டி.எம்.எஸ் புகழ் என்றும் மேலோங்கி நிற்கும்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion