மேலும் அறிய

HBD Na.Muthukumar: இவரால் மட்டும் எப்படி? பெண் மனதை பிரதிபலிக்கும் நாமுவின் மாயாஜாலம்!

'ஒரு பெண்ணின் காதலை இவ்வளவு அழகாக சொல்லிவிட முடியுமா? இவ்வளவு எதார்த்தமாக சொல்லிவிட முடியுமா? கண்டிப்பா இந்த பாடலை ஒரு பெண் கவிஞர்தான் எழுதியிருக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.'

உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்

உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்

உன் பெயரைக் கேட்கையிலே உற்சாகம் துளிர் விடுதே

உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று

எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்

என் நெஞ்சைக் கேட்கிறேன் பதில் சொல்லிடவில்லை

கல்லூரி படத்தில் வரும் பாடல் இது. இந்த பாடலை முதல் முறை கேட்டு முடித்தபோது, ஏதோ கனவு உலகிற்கு சென்று ரியாலிட்டியாக வாழ்ந்துவிட்டு வந்ததுபோல இருந்தது.

பல பாடல்களை கேட்டிருப்போம், கேட்டு கடந்திருப்போம், சில பாடல்கள் மனதில் நிற்பவை, சில பாடல்கள் பாதிக்கக்கூடியவை.... இப்படி பல பாடல்கள் இருப்பின், இந்த பாடலை கேட்டு முடித்தவுடன் இசையமைப்பாளரை யார் என்று கூட தேடவில்லை, பாடல் வரிகளை எழுதியது யார் என்றுதான் தேடினான். 'ஒரு பெண்ணின் காதலை இவ்வளவு அழகாக சொல்லிவிட முடியுமா? இவ்வளவு எதார்த்தமாக சொல்லிவிட முடியுமா? நம்ம நினைக்கிறது அப்படியே எழுத்திருக்காங்க, கண்டிப்பா இந்த பாடலை ஒரு பெண் கவிஞர்தான் எழுதியிருக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.'

அது பொய்யானது. ஏனென்றால், தேடலில் கிடைத்த பெயர் – நா. முத்துகுமார்!

அடடே நா. முத்துகுமார் நமக்கு பரிச்சயமானவர்தானே என நினைத்துக் கொண்டேன். பழக்கப்பட்ட பரிச்சயம் இல்லை, அவரது பாடல் வரிகளால் எந்நாளும் நம்மை ஏதாவதொரு சிந்தனையில் ஆழ்த்தக்கூடிய அவர் நமக்கு பரிச்சயமானவர்தானே!

இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் தோன்றும், நா.மு எந்த பெண்ணிடம் பேசி அவளது மனதை புரிந்து கொண்டு இந்த பாடலை எழுதியிருப்பார்? அவரே தன்னை ஒரு பெண் போல பாவித்து கொண்டு இந்த வரிகளை எழுதியிருப்பாரோ, இருந்தாலும் எப்படி சாத்தியமானது என ஒவ்வொரு முறையும் வியக்க வைப்பவர், இந்த பாடல் மட்டுமின்றி இதே போல பல ஆயிரம் பாடல்களை நமக்கு விட்டுச்சென்றுள்ளார். அவற்றை கேட்கும்போதெல்லாம் அந்த வியப்பு எட்டிப்பார்க்கும்!

இதே படத்தில் வரும் மற்றொரு பாடலான, “சரியா இது தவறா... இந்த உணர்வினை புரிந்திட மனதிற்கு தெரியல...” - இது அப்படியே இன்னொரு பக்கம். காதலை வெளிப்படுத்த ஓர் ஆணுக்கு இருக்கும் தயக்கத்தை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். கல்லூரி படத்தில் இந்த பாடல்களை கேட்ட பிறகு, எனக்கும் மிகவும் பிடித்த நா.மு, நான் கொண்டாடிய நா.மு- யுவன் காம்போ அன்று வேறு பரிமாணத்தை எட்டியது. இந்த காம்போ அல்லாத நா.முவின் வேறு சில பாடல்களையும் தேடி தேடி ரசித்தேன்.

குறிப்பாக, பெண்கள் மனதை பிரதிபலிக்கும் காதல் பாடல்களுக்கு நா.மு மிகவும் அழகாக எழுதியிருப்பார். தில்லாலங்கடி படத்தில் “சொல் பேச்சு கேட்காத சுந்தரியே”, தென்னவன் படத்தில் வரும் “விநோதனே விநோதனே”, காதல் கொண்டேன் படத்தில் வரும் “நெஞ்சோடு கலந்திடு உறவாலே”, 7ஜி ரெயின்போ காலணியில் “நினைத்து நினைத்து பார்த்தால்...”, பாரிஜாதம் படத்தில் "உன்னை கண்டேனே முதல் முறை நான்", கிரீடம் படத்தில் "அக்கம் பக்கம் யாரும் இல்லா", சத்தம் போடதே படத்தில் "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்", வெப்பம் படத்தில் "மழை வரும் அறிகுறி...", கழுகு படத்தில் "ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது"... இப்படி பல நூறு பாடல்களை விட்டுச்சென்றுள்ளார்! நான் அழகாக காதல் செய்ய, இத்தனை இத்தனை பாடல்களை விட்டுச்சென்ற நாமுவுக்கு நன்றிகள்!

காதல், நட்பு, ஏமாற்றம், நம்பிக்கை, தனிமை, கொண்டாட்டம், அழுகை என "ஒவ்வொரு எமோஷனுக்கும், ஒவ்வொரு பாடல்" நா.முவின் ப்ளேலிஸ்டில் இருக்கும். இசையமைப்பாளருக்கு ப்ளேலிஸ்ட் போட்டு கேட்ட பாடல்களையே திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பது எவ்வளவு வழக்கமோ, அதே போல பிடித்த "பாடல் வரிகளுக்கென்றே" ஒரு தனி ப்ளேலிஸ்ட் அமைத்து, நாமுவின் பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பதும் வழக்கம்தான். இப்படி பல நூறு பாடல்களை விட்டுச்சென்ற நாமுவின் பிறந்தநாள் இன்று! நன்றி நாமு, பிறந்தநாள் வாழ்த்துகள் விநோதனே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget