டாக்டர் பட ஹிட்.! ரெடி.. ஸ்டெடி.. ஜூட்.. அடுத்தடுத்து படங்கள். மாஸ் காட்டும் ரெடின் கிங்ஸ்லி.!
அப்படியே குரல ஒசத்தி கிங்ஸ்லி பேசும்போது கிங்ஸ்லி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து விடுவார். நயன்தாராவுடம் நெற்றிக்கண் படத்தில் கிங்ஸ்லியின் நடிப்பு கவனம் ஈர்த்தது.
அப்படியே குரல ஒசத்தி பேசும்போது கிங்ஸ்லி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து விடுவார். நயன்தாராவுடன் நெற்றிக்கண் படத்தில் கிங்ஸ்லியின் நடிப்பு கவனம் ஈர்த்தது. அடுத்ததாக இப்போது டாக்டர் படத்தில் கிங்ஸ்லி பிண்ணிப் பெடலெடுத்திருக்கிறார். யோகிபாபுவுக்கு இந்தப் படம் ஒரு சிக்னேச்சர் என்று கூறலாம். ஆனால், கிங்க்ஸ்லியும் ஈகுவலாக காமெடியில் சரவெடி கொளுத்திப் போட்டிருக்கிறார்.
வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கட் சொன்னபோது விழுந்த கேப்பை யோகிபாபு நிரப்பினார். இப்போது அவர் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். இடையில் விஜய் டிவியின் புகழும் காமெடி நடிகர்கள் பட்டாளத்தில் இணைந்துள்ளார். பாலாவும் தான். இதில் லேட்டஸ்டாக கிங்ஸ்லி இணைந்திருக்கிறார்.
டாக்டரில் சிவகார்த்திகேயனுடனான கூட்டணி வொர்க் அவுட் ஆகிவிட்டது. அடுத்து அண்ணாத்த படத்தில் காமெடியில் மாஸ் காட்டவிருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிறது. அதில் கிங்க்ஸ்லி கதாபாத்திரம் பேசப்படும் எனக் கூறுகிறது நம்பத்தகுந்த வட்டாரம்.
இது மட்டுமல்லாமல் இன்னும் 4 படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ளார் கிங்க்ஸ்லி. அவர் நடிக்கவிருக்கும் படங்கள் நான்குமே மாஸ் ஹீரோ படம். நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல ஆகிய படங்களில் ரெடின் தான் காமெடியனாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமா சரியான நேரத்தில் சரியான நடிகர்களை நமக்கு விருந்தாக கொடுத்துக் கொண்டே இருக்கிறது. கவுண்டமனி, செந்தில், வடிவேலு, விவேக், சதீஷ், கருணாகரன், சந்தானம், யோகிபாபு, இப்போ புகழ், பாலா, ரெடின் கிங்ஸ்லி. இடை இடையே பிஜிலி ரமேஷ் போன்றோரும் நம்மை நடிப்பால் வயிறு குலுங்க வைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
நெற்றிக்கண் கிங்ஸ்லி..
நெற்றிக்கண் திரைப்படம் சற்று இறுக்கமாக நகர்ந்து கொண்டிருக்கும் போது கருக்கலைப்பு ஏஜன்டாக கிங்ஸ்லி என்ட்ரி கொடுப்பார். வில்லன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது ஆனா சும்மா டெரர் லுக் காட்டுவதா ஒரு பெக்குலியர் மாடுலேஷனில் பேசி, நயனை கடுப்பேற்றுவார் கிங்ஸ்லி.
அதுவும் நயன்தாராவை வேனில் ஏற்றும்போது கண்ணைக் கட்டிவிட்டு இது எத்தனை என்று கேட்கும் காட்சி செம்ம வகையறா. டாக்டர் படத்தில் யோகிபாபுவுக்கு ஈடுகொடுத்து கிங்க்ஸ்லி காட்டியுள்ள நடிப்பு அவரை தமிழ்த் திரையுலகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அப்புறம் என்ன இன்னும் கொஞ்ச நாளில் சாரை கேரவன் ஆர்ட்டிஸ்டா பார்க்கலாம். கோடம்பாக்கத்தின் கேரில் ஒருவர் வந்துவிட்டால் போதும் அடிச்சாச்சு லக்கி பிரைஸ் மொமன்ட் தான்.