Beast banned in Kuwait: அடுத்தடுத்து படையெடுக்கும் தடை... பிரச்சனையின்றி வெளியாகுமா பீஸ்ட்?
பீஸ்ட் படமும், கன்னட யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடுத்தடுத்த நாள்களில் வெளியாக இருப்பதால் இந்தப்படங்களுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது
விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லருக்கு வரவேற்பும், விமர்சனங்களும் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் நிலையில், யூடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் டிரெய்லரில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, துல்கர் சல்மான் நடித்த குரூப், விஷ்னு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படங்களும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The power-packed #BeastHindiTrailer is out now!
— Sun Pictures (@sunpictures) April 4, 2022
▶ https://t.co/1kew6cpMcu@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv @UFOMoviez #BeastModeON #BeastMovie #Beast
பீஸ்ட் படத்தின் கதை இதுதான் என அங்கும் இங்குமாய் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், படத்தின் டிரைலைரை வைத்து படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. முதலாவதாக, குவைத்தில் பீஸ்ட் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குவைத் அரசு சுட்டிகாட்டியிருப்பது போல, படத்தில் தீவிரவாதிகளா காண்பிக்கப்படுபவர்கள் இஸ்லாமியர்கள் அணியும் உடையை போன்றதாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அச்சமூக மக்களின் உணர்வளை புண்படுத்துவதாக இருப்பதால் படத்திற்கு தடைவிதித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக விஜய் படங்கள் வெளியாக சில மாதங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பே, ஏதோ ஒரு காரணம்காட்டி படம் வெளியாக முடியாதபடி செய்ய பலரும் பல வழக்குகளை தொடுத்து உள்ளனர். உதாரணமாக தலைவா முதல் கடைசியாக வெளியான மாஸ்டர் வரை விஜய் படங்கள் இந்த பிரச்னைகளை சந்தித்திருக்கிறது. இந்நிலையில், பீஸ்ட் வெளியாக இன்னும் ஒரு வாரம் இருப்பதால் இது போன்ற பிரச்னைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இதை தாண்டி, படம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பீஸ்ட் படமும், கன்னட யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடுத்தடுத்த நாள்களில் வெளியாக இருப்பதால் இந்தப்படங்களுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக, நடிகர் விஜய், சன் டிவிக்கு நேர்காணல் தந்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். இந்த நேர்காணலில் நடிகர் விஜயை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கேள்வி கேட்கிறார். இந்நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9-ம் தேதி இரவு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்