Anirudh Ravichander: அப்படிப்போடு.. காதல் திருமணம் செய்யப்போகும் அனிருத்.. அப்பா சொன்ன தகவல்!
சமீபகாலமாக அனிருத் பற்றி பல கிசுகிசுக்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது. அவர் பிரபலமான ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகிறது.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் எப்போது திருமணம் செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு அவரது தந்தையும், நடிகருமான ரவி ராகவேந்திரா பதிலளித்துள்ளார்.
திருமணம் எப்போது?
ஒரு நேர்காணலில் பேசிய ரவி ராகவேந்திராவிடம், “அனிருத் இப்போது தான் சினிமாவுக்கு வந்த மாதிரி இருக்கு. முன்னணி பிரபலங்கள் அனைவருக்கும் இசை அமைத்து விட்டார். அவர் எந்த மேடைக்கு போனாலும் எப்போது திருமணம் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது”.. அனிருத்துக்கு எப்போது தான் திருமணம் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரவி ராகவேந்திரா, ”இப்படி கேட்பவர்களிடம் நான் சொல்லும் பதில். உங்களுக்கு தெரிஞ்சா தேதி சொல்லுங்க என்று தான் கூறுகிறேன். கல்யாண பேச்சு கூட எடுக்க மாட்டோம். இன்றைக்கு எந்த பையன் தான் பெற்றோர்களிடம் ஒரு பெண்ணை திருமண செய்ய ஆசைப்படுகிறேன். கட்டி வைங்க என சொல்கிறார்கள்?. சில பேர் சொல்லலாம். யாருமே கல்யாணம் பண்ணிகலாமா என கேட்பதில்லை. நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன் என்றுதான் கூறுகிறார்கள். நாங்களும் காத்திருக்கிறோம். பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
#OruPereVaralaaru streaming now on all platforms 🧨🎇https://t.co/WBdTpoD6Fs
— Anirudh Ravichander (@anirudhofficial) December 19, 2025
Thank you @Lyricist_Vivek for the wonderful lines as always ❤️ @VishalMMishra #SridharSena #YogiSekar #Velu #Shibi for the power vocals ❤️ pic.twitter.com/B7FZxIQ2YR
ஆனால் சமீபகாலமாக அனிருத் பற்றி பல கிசுகிசுக்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது. அவர் பிரபலமான ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகிறது. எனினும் அதனை அனிருத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. அவரது புகழ் பிடிக்காமல் சிலர் இப்படி வதந்தி பரப்பி விடுவதாக அனிருத் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் திரைத்துறை வளர்ச்சி
2012ம் ஆண்டு “3” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார். தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, கத்தி போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை கவர முன்னணி இடத்துக்கு வந்தார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
அடுத்ததாக அவரின் இசையமைப்பில் ஜனநாயகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2, டிசி, அரசன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.





















