குமுறும் ஆர்த்தி ரவி..ஜாலியாக இன்ஸ்டாவில் கருத்தூசி போடும் கெனிஷா..ஐயா ரவி என்னதான் நடக்குது
Kenisha Francis : ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து தற்போது பாடகி கெனிஷா பிரான்சிஸ் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்

மீண்டு கிளம்பிய ஜெயம் ரவி சர்ச்சை
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த ஆண்டு விவாகரத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தி மற்றும் ரவி குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவின. ரவியின் சொத்துக்களை அபகரித்து அவரை திருமண வாழ்க்கையில் மரியாதையின்றி நடத்தியதாகவும் இதனால் ரவி மோகன் இந்த விவாகரத்தை முன்னெடுத்ததாகவும் கூறப்பட்டது. அதே போல் ரவி மோகனுக்கும் கெனிஷா பிரான்சிஸ் என்கிற பாடகிக்கும் இடையில் காதல் தொடர்பே இந்த விவாகரத்திற்கான காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தனக்கும் கெனிஷாவுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் ரவி மோகன் கூறியிருந்தார்
திருமணத்திற்கு ஜோடியாக வந்த ரவி மோகன்
சிறிது காலம் அடங்கியிருந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. தயாரிப்பாளர் ஐஷரி கணேஷின் மகளின் திருமணத்திற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்பு தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த ரவி தான் இப்போது கெனிஷாவின் கைகளை பிடித்துக் கொண்டு மேட்சிங்காக உடை அணிந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்.
ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை
இந்த நிகழ்வு பேசுபொருளானதைத் தொடர்ந்து ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அறிக்கையில் அவர் " நான் ஒரு வருடமாக, ஒரு கவசம் போல் என்னுடைய மௌனத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். அதற்க்கு காரணம் நான் பலவீனமாக உள்ளேன் என்பது அல்ல, என் மகன்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதால் தான்.
என் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு பழியும், மோசமான விமர்சனங்களையும் நான் உள்ளே வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பதற்கு காரணம், உண்மையை சொல்ல வேண்டாம் என்பது கிடையாது. பெற்றோர்களுக்கிடையிலான அந்த சுமையை குழந்தைகள் சுமக்க வேண்டாம் என்பதற்காக தான் அமைதி காத்தேன்.
ஆனால், இன்று வெளியான புகைப்படங்களையும், அதற்கான தலைப்புகளையும் பார்த்தபோது, எல்லாம் வேறு மாதிரியாக தோன்றியது. என்னுடைய விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் 18 ஆண்டுகளாக என் அன்பிலும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் என்னை மட்டும் விட்டுச்செல்லவில்லை. ஒரு காலத்தில் எனக்கு கொடுத்த சத்தியத்தில் இருந்தும் பொறுப்புகளிலிருந்தும் விலகிச் சென்றுள்ளார்.
அவர் எனக்கு உண்மையாக இருந்திருந்தால், நான் முன்பே என் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்திருப்பேன். ஆனால் நான் கணக்கீடுகளை விட அன்பைத் தேர்ந்தெடுத்தேன். பரிவர்த்தனையை விட நம்பிக்கையை தேடினேன். இறுதியில் இங்கு வந்து நிற்கிறேன். நான் அன்பு செலுத்தியதால் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் என் காதல் மீண்டும் பலவீனமாக பார்க்க முடியாது. என் குழந்தைகள் 10 மற்றும் 14 வயதே ஆகும் சிறு பிள்ளைகள். அவர்களுக்கு பாதுகாப்பு தான் தேவை. அதிர்ச்சி அல்ல. சட்டப்பிரிவுகளை புரிந்துகொள்ளும் வயது அவர்களுக்கு இல்லை. ஆனால் கைவிடப்பட்டதை புரிந்துகொள்ளும் வயது. பதிலளிக்கப்படாத அழைப்புகளும், ரத்து செய்யப்பட்ட சந்திப்புகளையும் அவர்கள் அறியும்போது அது அவர்கள் மனதில் காயங்களாக மாறிவிடும்.
இன்று நான் ஒரு மனைவியாகப் பேசவில்லை. ஒரு அநீதி இழைக்கப்பட்ட பெண்ணாகக் பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு தாயாகப் பேசுகிறேன். நான் இப்போது பேசவில்லை என்றால் அவர்களை என்றென்றும் இழந்துவிடுவேன்" தனது வேதனையை பதிவு செய்திருந்தார்
அர்த்திக்கு கெனிஷா பதில்
இப்படியான நிலையில் பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரிகளை பதிவிட்டுள்ளார். அதில் அவர் " தீமை என்றும் நிலைக்காது' ' லட்சியவாதிகளுக்கு எப்போது இரு தேர்வுகள் தான் இருக்கின்றன. ஒன்று ஒரு நல்ல ஆதரவுள்ள துணை அல்லது துணையே இல்லாமல் இருப்பது" " வெற்று அங்கீகாரங்களால் திருப்தி அடையாதவர்களுடனே அதிர்ஷ்டம் துணை நிற்கும்" " கண்ணால் பார்க்க முடியாத ஒன்றை நம்பினால் தான் பார்க்க முடிந்த ஒன்றின் மேல் உங்களுக்கு கட்டுப்பாடு இருக்கும் " இவ்வாறு முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஸ்டோரிக்களில் கருத்தூசி போட்டு வருகிறார் கெனிஷா பிரான்சிஸ் .





















