வெளியான முடிவுகள்! திரும்பி பார்க்க வைத்த 12ஆம் வகுப்பு மாணவர்கள்!

Published by: மா.வீ.விக்ரமவர்மன்

வேடசந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் பொது தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்.

கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது கத்தியால் குத்தியதில் உயிரிழந்த பிளஸ் டூ மாணவன் ஷியாம் சுந்தர் 351 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்து, ஓவியாஞ்சலி தூள் கிளப்பியுள்ளார்.

தாய் இறந்த துக்கத்திலும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த மாணவர் சுனில் குமார் 375 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பிளஸ் டூ தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆர்த்திகா 413 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,325 மாணவர்களும், 4,454 மாணவிகளும் என மொத்தம் 8,779 பேர் 45 தேர்வு மையங்களில் எழுதினர். இதில் 98.82 சதவீத தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்தது

பெரம்பலூர் மாவட்டம் 12ஆம் வகுப்பு தேர்வில் 96.58 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 96.44 சதவீதத் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 6வது இடத்தில் இருந்த பெரம்பலூர், தற்போது 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில், 79 பள்ளிகளில் 8 அரசுபள்ளிகள் உள்பட 36 ள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சுஹாசினி கடந்த மார்ச் 25ஆம் தேதி தேர்வு எழுதுவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து நிற்காமல் சென்ற நிலையில் அந்த மாணவி பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து அசத்தல்!

திருப்பூர்: பல்லடத்தில் மளிகை கடைக்காரரின் மகன் ராகுல், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்