sivakarathikeyan | rashmika | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா ? - எந்த படம் தெரியுமா ?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொட்டு தற்போது நேஷ்னல் கிரஸ் ராஷ்மிகா மந்தனா வரையிலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்க தொடங்கிவிட்டனர்.
கோலிவுட் சினிமாவில் கலக்கி வரும் நடிகர்கள் சமீப காலமாக இந்திய பிராந்திய மொழி சினிமாக்களிலும் களம் கண்டு வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளராக இருந்து இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப நாட்களில் ஹன்சிகாவுடன் டார்லிங்கு டப்பக்கு என ஜோடிப்போட்ட பொழுது சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகா எல்லாம் ஓவர்பா..என நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்தனர். ஆனால் நாளை என்றும் நம் கையில் இல்லை என முன்னேறிய சிவா, அடுத்தடுத்து கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களுடனும் ரொமான்ஸ் செய்ய தொடங்கிவிட்டார். முன்னணி நடிகர்கள் படத்தில் மட்டுமே நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொட்டு தற்போது நேஷ்னல் கிரஸ் ராஷ்மிகா மந்தனா வரையிலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்க தொடங்கிவிட்டனர்.
#MerryChristmas to all 🎄🎅❤️❤️😊👍 pic.twitter.com/BZCGEACnxQ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 25, 2021
என்னது ராஷ்மிகா மந்தனாவா, இது எப்போனு கேட்குறீங்களா? தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் அடிப்படையில் , விரைவில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படம் ஒன்றில் நடிக்க போகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் என்பதால் தெலுங்கு ஆடியன்ஸையும் கவரும் நோக்கில் சிவா தற்போது முழு வீச்சில் தெலுங்கு பேச பயிற்சி எடுத்து வருகிறாராம். அனுதீப் , சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக உள்ள இந்த புதிய படத்தின் ஷுட்டிங் ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளதாம். படத்தின் பெயர் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்
#Sivakarthikeyan - #Rashmika and #Anudeep : Announcement Soon. pic.twitter.com/wGPLuHkAsz
— Aakashavaani (@TheAakashavaani) July 26, 2021
சிவா நடிப்பில் டான் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இது தவிர கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநர்களுள் ஒருவரான ராஜ்குமார் இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.அட்லியின் உதவி இயக்குநர் அசோக் இயக்கத்தில். அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.