![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pushpa 2: என்னது ஸ்ரீவள்ளி செத்துருவாங்களா? புஷ்பா 2-இல் பகீர் ட்விஸ்ட்? ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்..
முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதால் இரண்டாம் பாகத்தை வெறித்தனமாக எடுத்துவிட வேண்டுமென படக்குழு மெனக்கெட்டு வருகிறது.
![Pushpa 2: என்னது ஸ்ரீவள்ளி செத்துருவாங்களா? புஷ்பா 2-இல் பகீர் ட்விஸ்ட்? ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்.. Rashmika Mandanna’s character killed in Pushpa 2? Producer CLARIFIES Pushpa 2: என்னது ஸ்ரீவள்ளி செத்துருவாங்களா? புஷ்பா 2-இல் பகீர் ட்விஸ்ட்? ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/21/dd66bc683f4b815f5bcacdd3366f83fe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புஷ்பா..
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லுவின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஓ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது. ஆனால் அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றுவிட்டது. பேன் இந்தியா திரைப்படம், பிரம்மாண்ட கதையம்சம், ஊ சொல்றியா பாடல் என பல எதிர்பார்ப்புகளுடன் புஷ்பா வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த அளவுக்கு படம் பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையே படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டது படக்குழு. முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதால் இரண்டாம் பாகத்தை வெறித்தனமாக எடுத்துவிட வேண்டுமென படக்குழு மெனக்கெட்டு வருகிறது.
View this post on Instagram
பல பல தகவல்கள்...
இப்படி ஒருபுறம் படக்குழு தீவிரமாக இருக்கும் நிலையில் மறுபக்கம் படம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.அதன்படி இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா ஏற்று நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் முடிவுக்கு வருவதாகவும், ராஷ்மிகா இறப்பதுதான் கதையின் போக்கு எனவும் கூறப்படுகிறது. ராஷ்மிகாவின் காட்சிகள் கதையின் வேகத்தை குறைக்கும் என்பதாலும், அதன்படி ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தை குறைக்கும் விதமாகவே இந்த ட்விஸ்டை இயக்குநர் கையில் எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படியான தகவலை படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
ஸ்ரீவள்ளி முடிவுக்கு வருதா?
இது குறித்து பிங்க் வில்லா இணையதளத்துக்கு பேசிய தயாரிப்பாளர் ரவிசங்கர், இந்த தகவல் எல்லம் முட்டாள்தனமாக உள்ளது. நாங்கள் இதுவரை கதையை முழுதாகக் கூட கேட்கவில்லை. யாருக்குமே எதுவுமே தெரியவில்லை. வெளியாகும் தகவல் எல்லாமே வதந்திதான். அதில் துளியும் உண்மையில்லை. வெளியாகும் தகவல் இணையத்திலும், டிவி சேனல்களிலும் கூட ஒளிபரப்பாகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை என்றார். அப்படியென்றால், இரண்டாம் பாகத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உயிரோடுதான் இருப்பாரா என்ற கேள்விக்கு ஆமாம். நிச்சயமாக என்றார்.
புஷ்பா ஷூட்டிங் குறித்து பேசிய தயாரிப்பாளர், ஆகஸ்ட் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)