மேலும் அறிய

Watch Video: ராஷ்மிகாவுக்கு இவ்வளவு பேராசையா? குபேரா பர்ஸ்ட் லுக் வீடியோ சொல்வது இதுதானா!

Watch Video : சேகர் கமுல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'குபேரா' படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் பர்ஸ்ட் லுக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் திறமையான முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தான் இரண்டாவதாக இயக்கி நடித்துள்ள 'ராயன்' திரைப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் அவரின் அடுத்த ப்ராஜெக்ட்டில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். 

 

Watch Video: ராஷ்மிகாவுக்கு இவ்வளவு பேராசையா? குபேரா பர்ஸ்ட் லுக் வீடியோ சொல்வது இதுதானா!

குபேரா:

சேகர் கமுல்லா இயக்கத்தில் நடிகர் தனுஷ் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் சமூக அக்கறை சார்ந்த ஒரு படமாக உருவாகி வரும் திரைப்படம் 'குபேரா'. நல்ல திரைக்கதை கொண்ட படங்களுக்கு பெயர் போன சேகர் கமுல்லா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ரசிகர்கள்  மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகி வரும் 'குபேரா' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனுக்கான படப்பிடிப்பு ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தாய்லாந்து, திருப்பதி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது ஹைதராபாத்தில் 'குபேரா' படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

 

Watch Video: ராஷ்மிகாவுக்கு இவ்வளவு பேராசையா? குபேரா பர்ஸ்ட் லுக் வீடியோ சொல்வது இதுதானா!

பேராசைக்காரியாக ராஷ்மிகா?

நடிகர் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. பிச்சைக்கார லுக்கில் தனுஷும், பணக்காரராக இருந்தும் பணத்தின் மீது ஈடுபாடு இல்லாதது போன்ற நாகர்ஜுனாவின் போஸ்டரும் வெளியானது. அதை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிடுவதாக அறிவிப்பு விடுத்திருந்தது. 


அந்த வகையில் படக்குழுவின் அதிகாரபூர்வமான சமூக வலைதள பக்கம் மூலம் ராஷ்மிகாவின் பர்ஸ்ட் லுக் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டு இருந்த  சூட்கேஸை எடுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அது பணப்பெட்டியா? அல்லது பிணப்பெட்டியா? என தெரியவில்லை. ஆனால் ராஷ்மிகா கண்களில் பேராசை தெரிகிறது. 

 


இதுவரையில் ஒரு பார்பி டால் போன்ற கதாபாத்திரத்தில் வந்து போன ராஷ்மிகாவுக்கு இப்படம் ஒரு சவாலான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் இந்த பர்ஸ்ட் லுக் தோற்றம் கொண்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காக உள்ளது. 


சுல்தான், வாரிசு படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைத்த ராஷ்மிகாவின் மார்க்கெட் 'குபேரா' படத்தின் ரிலீசுக்கு பிறகு பன் மடங்காக எகிற போகிறது. அவருக்கு இது ஒரு டர்னிங் பாய்ண்ட் படமாக அமையும் என்பது அவரின் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. தற்போது அவர் மிகவும் பிஸியாக புஷ்பா 2 , சிக்கந்தர் மற்றும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். 

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget