Kubera: ரசிகர்களே! குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவில் லுக்கை பாருங்க!
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
ராஷ்மிகா மந்தனா
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து திரையுலகில் கால் தடம் பதித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கன்னடம், தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு திரைப்படங்களில் நடித்து தமிழுக்கும் வருகை தந்த ராஷ்மிகா கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் வழி பான் இந்திய நடிகையாக உருவெடுத்டுள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு என ஒரே சமயத்தில் மூன்று மொழிகளிலும் பெரிய ஸ்டார்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ் , இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்த தனுஷ் இப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வர ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது . இப்படத்தில் நாகர்ஜுனா , ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஹைதராபாத் , மும்பை உள்ளிட்ட நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தனுஷ் மற்றும் நாகர்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது நடிகை ராஷ்மிகா மந்தவாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
Here is the first look of @iamRashmika from Sekhar Kammula's Kubera...https://t.co/0TNhAXlLke#SekharKammulasKubera #RashmikaMandanna
— Sekhar Kammula (@sekharkammula) July 5, 2024
மண்ணில் புதைத்து வைத்திருக்கும் பெட்டி நிறைய பணத்தை ராஷ்மிகா மந்தனா எடுத்துச் செல்வது போன்ற ஒரு சிறு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
புஷ்பா 2
குபேரா படம் தவிர்த்து ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்துள்ளார். சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது . தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக தெவிக்கப் பட்டிருந்தது. பின் படத்தின் ரிலீஸ் டிசம்பர் 6 வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
புஷ்பா 2 தவிர்த்து இந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்கும் சிகந்தர் படத்தில் நாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.