மீண்டும் ராமாயணத்தை மையமாக கொண்டு திரைப்படம்... ராவணன் வேடத்தில் யஷ்..? சீதாவாக ஆலியா பட்!
ராமாயணத்தை மையமாக கொண்டு மீண்டும் ஒரு கதை இந்திய சினிமாவில் படமாக்கப்பட இருக்கிறது.
இந்தியளவில் தற்போது அதிகளவிலான எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் ராமனாக பாகுபலி புகழ் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் நிலையில், வருகின்ற ஜூன் 16ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகிறது.
கடந்த ஜுன் 6ம் தேதி ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். இந்தநிலையில் இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றன.
இந்தநிலையில், ராமாயணத்தை மையமாக கொண்டு மீண்டும் ஒரு கதை இந்திய சினிமாவில் படமாக்கப்பட இருக்கிறது. இந்த படமும் கிட்டதட்ட தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் , கன்னட மொடிகளில் தயாராக இருக்கிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உள்ளிட்ட சில இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், இதில் ராமர் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக ஆலியா பட்டும் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
ராமாயணத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்த படத்தை 2 பாகங்களாக எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ராவணன் கதாபாத்திரத்தில் யஷ்..?
ராவணன் வேடத்தில் பிரபல கன்னட நடிகர் யஷிடம் பேசி வந்தனர். கடந்த 8 மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் ராவணனாக நடிக்க யஷ், இறுதியாக சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை படக்குழுவும் கிட்டதட்ட உறுதி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆதாரங்களின்படி, யஷ் இன்னும் படத்தில் நடிப்பது தொடர்பாக உறுதி செய்யப்படவில்லை. யஷை எப்படியாவது படத்தில் நடிக்க வைப்பதில் படக்குழு தீர்மானத்துடன் உள்ளது. படம் எடுக்க சில சிறிய சிக்கல்கள் உள்ளது. அவை தீர்க்கப்பட்டவுடன் படம் எடுக்கப்படும் என தெரிகிறது.
ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் மற்றும் சீதாவுக்கான ஆலியாவின் தோற்ற சோதனைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அனைவரின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.