Ranbir Kapoor Alia Bhatt Wedding: ரன்பீர்-அலியா ஜோடிக்கு டும்.. டும்.. டும்.. சொல்றாங்க பிரபல நடிகை!
இந்த ஜோடி திருமணம் செய்துகொள்வார்களா? அல்லது டேட்டிங், காதலோடு நின்றுவிடுமா என பல செய்திகளும், யூகங்களும் பாலிவுட்டில் பரபரக்கின்றன.
பாலிவுட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ரன்பீர் கபூர். காதல் ரோமியோவாக சுற்றி வரும் ரன்பீர் தற்போது அலியாபட் உடன் காதலில் இருக்கிறார் என்பது பாலிவுட் அறிந்த கதை தான். அவ்வப்போது இலை மறை காயாக இவர்களது காதல் கதை பேசப்படுவதும் அதற்கு அவர்கள் மறைமுகமாக பதிலளிப்பதும் உண்டு. ஆனால் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்வார்களா? அல்லது டேட்டிங், காதலோடு நின்றுவிடுமா என பல செய்திகளும், யூகங்களும் பாலிவுட்டில் பரபரக்கின்றன.
இந்நிலையில் ரன்பீர்-அலியா ஜோடி இந்த வருடம் நிச்சயம் திருமணம் செய்துகொள்வார்கள் என உறுதியாக சொல்கிறார் பிரபல நடிகை லாரா தத்தா. வஷு மற்றும் ஜாக்கி பக்னானி தயாரிப்பில் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் இந்தியில் ’பெல்பாட்டம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. அக்ஷய் குமார், ஹுமா குரேஷி, வானி கபூர், லாரா தத்தா எனப் பெரும் பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. 1980களில் நடக்கும் ஸ்பை த்ரில்லர் வகையறா கதையாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, டைம்ஸ் நவ் சேனலுக்கு பேசிய லாராவிடம் ரன்பீர்-அலியா காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த கால இளம் நடிகர்களின் டேட்டிங் விவகாரங்கள் குறித்து அதிகமாக எனக்கு தெரியவில்லை. நான் சில ஜோடிகளைப் பற்றி ஏதாவது சொல்லலாம். ஆனால் அவர்கள் இன்னும் ஒன்றாக இருக்கிறார்களா இல்லையா என்று கூட எனக்குத் தெரியாது. ரன்பீர்-அலியா ஜோடி விரைவில் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. இந்த வருடத்துக்குள் அவர்கள் திருமணம் செய்வார்கள் என நம்புகிறேன் என்ரார். லாரா தத்தாவின் இந்த மறைமுக பதில் ரன்பீர்-அலியா திருமணத்தை உறுதி செய்வதாகவே உள்ளது.
ரன்பீர்-அலியா இருவரும் 2020ல் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான வேலைகளும் பரபரப்பாக நடந்தது. ஆனால் அப்போது தான் ரிஷி கபூர் காலமானார். இதனால் அவர்கள் திருமணம் தடைபட்டது. பின்னர் 2021ல் திருமணம் என கூறப்பட்டது. அந்த நேரத்தில் தான் ரன்பீர்-அலியா இருவருக்குமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில் திருமணத்தை குறித்து அவர்கள் ஏதும் வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இந்த வருட இறுதிக்குள் இந்த ஜோடி திருமண பந்தத்துக்குள் செல்லும் என பாலிவுட் உலகம் எதிர்பார்க்கிறது.
ரன்பீர் மற்றும் அலியா ஜோடி 2017ம் ஆண்டு முதல் காதலில் கிசுகிசுக்கப்படுகின்றனர். ரன்பீரின் அம்மா நீதுவுடனும், ரன்பீரின் சகோதரிகளுடன் மிக நெருக்கமானவர் அலியா. அலியாவும், ரன்பீரும் விரைவில் அயன் முகர்ஜியின் பிரமாஸ்திரா என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.