மேலும் அறிய

Ramarajan 46: இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் ராமராஜன்... மாஸ் காண்பிக்க வரும் 46ஆவது படம்!

ராமராஜன் முன்னதாக நடித்து முடித்துள்ள சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் V என்பவர், இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

கோலிவுட்டில் பல வெள்ளிவிழா படங்களைக் கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வந்து மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். மேலும், இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் ராமராஜன் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் 7 ஆத்ரி ஃபிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக ராமராஜன் நடிக்கிறார். இது அவரது 46ஆவது திரைப்படம் ஆகும். ராமராஜன் முன்னதாக நடித்து முடித்துள்ள சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் V என்பவர், இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

சாமானியன் படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் முதன்முதலாக நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார். சாமானியன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் இளையராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் பிராங்க்ளின் என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் குமார் V பேசுகையில்,, “ராமராஜன் சார் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த சாமானியன் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அந்தப் படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ணத் தயாராகி விட்டேன்.. உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருடமாக சாமானியன் படத்தில் கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குநர் போன்றே அவருடன் இணைந்து பயணித்து வந்துள்ளேன். அதனால் இந்தப் படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்தப் படத்தின் மூலம் நான் இயக்குநராகவும் மாறி உள்ளேன்.

அடிப்படையில் நான் ஒரு கதாசிரியர் மட்டும் தான்.. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது இல்லை.. பல படங்களில் கதை ஆலோசகராகப் பணியாற்றி உள்ளேன். அதேசமயம் கதாசிரியராக இருந்து இயக்குநராக மாறுவது ஒன்றும் சுமையான விஷயமும் அல்ல. கதையுடனே பயணித்து இருப்பதால் படத்தை இயக்குவது இன்னும் எளிதாகவே இருக்கும்.  

சாமானியன் படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018இல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்த படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார். ஆனால் இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும். ஆனால் சாமானியன் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இரண்டும் வெவ்வேறாக இருக்கும்.. 

இந்த படத்தில் நடிகர் ராமராஜன் இதுநாள் வரை பார்த்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு ஒரு சாதாரண வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். அவருக்குள் தற்போது இருக்கும் எண்ணங்களும் ஆர்வமும் கடந்த ஒரு வருடமாக அவருடன் பயணிப்பதால் எனக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் இதுவரை பார்த்திராத ஒரு ராமராஜன் படமாக மிகப்பிரமாண்டமாக மாஸான படமாக இது இருக்கும்.

நான் இயக்குநர் ஷங்கரின் தீவிரமான ரசிகன். அவரது படங்கள் அனைத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். அது படத்தில் பிரம்மாண்டமாக சொல்லப்பட்டிருக்கும். எனக்கும் அதேபோன்று சமூக அக்கறை உள்ள கதைகளை பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதனால் தான் தொடர்ந்து அதே போன்று சமூக அக்கறை கொண்ட கதைகளை உருவாக்கி வருகிறேன்.

இந்த படத்தில் இயக்குநராக அறிமுகமானாலும் எப்போதும் நான் ஒரு கதாசிரியர் என்று சொல்வதில் தான் எனக்கு பெருமை. மலையாள திரை உலகில் இயக்குநருக்கு அடுத்ததாக கதாசிரியருக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவிலும் அதுபோன்று கதாசிரியர்கள் நிறைய உருவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆர்வம்.. இதற்காக நான் தற்போது சினிமாவிற்கு நுழைபவர்களுக்காக வகுப்புகளும் எடுத்து வருகிறேன் 

இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதுடன் நானே டைரக்சனையும் கவனிப்பதால், வசனங்களை எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுக்கலாம் என பேசி வருகிறோம். அது உறுதியாகி, முழுமையான வசனங்கள் தயாரானதும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

இதற்கு முன்னதாக இந்த படத்தை பூஜையுடன் தொடங்கி டீசருக்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த டீசரை முடித்துவிட்டு இசைஞானி இளையராஜாவை சந்தித்து போட்டு காட்ட இருக்கிறோம். அதன்பிறகு இந்த படத்தில் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும்” என்று பேசியுள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget