Poonam Kaur : '’அவர் இயக்குநர் அல்ல, பெண்களை விற்கும் புரோக்கர்'' ராம்கோபாலை கிழித்து தொங்கவிட்ட நடிகை!
பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர்தான் இந்த இயக்குநர் ராம்கோபால் வர்மா என்று நடிகை பூனம் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நெஞ்சிருக்கும் வரை படத்தின் தமிழில் பிரபலமான நடிகை பூனம் கவுர்.இவர் தமிழில் தொடர்ந்து வெடி, பயணம், உன்னைப்போல் ஒருவன், 6 உள்பட பல படங்களில் நடித்து வந்தார். தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையும் ஆவார்.
எப்பொழுது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் கவுர். தற்போது தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா மற்றும் மற்றொரு இயக்குநர் ஒருவரை பற்றி டிவிட்டரில் புகார் ஒன்றை முன் வைத்துள்ளார். அதில், இந்த இருவருமே (ராம் கோபால் வர்மா, மற்றொரு இயக்குநர்) நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
நடப்பதெல்லாம் தெரியாதது போல் புன்னகைத்தபடி தவறான வேலைகளை செய்கின்றனர். தனிப்பட்ட நலனுக்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல் ரீதியாக இழிவுபடுத்துவதும் கைவந்த கலை. இரு இயக்குநர்களுமே பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
One director abuses his personal life completely and smiles from the corner and keeps quite while the public abuses for personal space
— पूनम कौर ❤️ poonam kaur (@poonamkaurlal) February 24, 2022
Another director would do anything to demean him politically and smiles on Twitter
Both are hired and paid agents using women as weapon . https://t.co/h47mhGFBb6
ராம்கோபால் வர்மா இயக்கிய ஒரு தெலுங்கு படத்திலும் பூனம் கவுர் நடித்திருந் தார். அப்போது ராம்கோபால் வர்மாவால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக முன்பு புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடித்த பீமலா நாயக்கின் இசை வெளியீடு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அந்த விழாவில் பவன் கல்யாணின் பேச்சால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், இது "பவன் கல்யாணின் சிறந்த பேச்சுகளில் ஒன்று" என்றும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதை ரீ-ட்வீட் செய்த நடிகை பூனம் கவுர், தான் இயக்குநர் ராம் கோபால் வர்மாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அவர் இரண்டு இயக்குநர்களை குறிப்பிட்ட நிலையில் அந்த மற்றுமொரு இயக்குநர் யார் என ட்விட்டரில் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்