Watch Video: நியூசிலாந்தில் படப்பிடிப்பு.. ஆப்பிரிக்க காட்டில் ஒர்க் அவுட்..எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஷங்கரின் RC15!
டோலிவுட் நடிகர் ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பான் இந்திய நடிகராக அங்கீகரிக்கப்பட்ட ராம் சரண் அவரின் இன்ஸ்டாவில் புதிய ஒர்க் அவுட் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
பிரபல டோலிவுட் நடிகரான சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜா, 2007-ல் வெளியான “சிறுத்தா” என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா உலகில் கால் பதித்தார். இதற்கு அடுத்து இவரது நடிப்பில் வெளியான “மகதீரா” படம் செம் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து அப்படமானது, “மாவீரன்” என்ற டைட்டிலில் தமிழில் வெளியானது. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த ராம் சரண், பாகுபலி இயக்குநரான ராஜமெளலியுடன் “ஆர் ஆர் ஆர்” படம் மூலம் இரண்டாவது முறையாக கைக்கோர்த்தார்.
View this post on Instagram
இதுவரை இப்படம் உலகளவில் 1100 கோடி ரூபாய் வசூலை பெற்று மரண ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து, ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு, ஜப்பான் நாட்டில் வெளியாகி, அங்கேயும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. இந்த படமானது பொருளாதார ரீதியாக மட்டும் வெற்றி பெறவில்லை. அதையும் தாண்டி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று, பல விருதுகளை குவித்தது. ஆஸ்கர் விருதிற்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு பின்னர், அப்பாவும் மகனும் சேர்ந்து நடித்த “ஆச்சார்யா” படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி, படும்தோல்வியை அடைந்தது. இப்போது, டைரக்டர் ஷங்கர் இயக்கி வரும் “ஆர்.சி 15” படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது ஒரு பான் இந்திய தயாரிப்பாக வெளியாகும் என்ற அறிவிப்பு முன்னதாக வந்தது.
View this post on Instagram
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிராவில் நடந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. அதற்கடுத்த படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆப்பிரிக்கா சென்றிருக்கும் ராம் சரண் அங்கு இருக்கும் கல்களை வைத்து ஒர்க் அவுட் செய்துள்ளார்.இது சம்பந்தமான வீடியோவை அவர் தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.