Rakul Preet Singh: ரிலேஷன்ஷிப்பை மறைக்க விரும்பல.. காதலரை பற்றி ஓப்பனாக பேசிய ரகுல் ப்ரீத் சிங்..!
என்னுடைய பர்சனல் வாழ்கையை நான் மறைக்க விரும்பவில்லை என ரகுல் ப்ரீத் சிங் பேசியுள்ளார்.
என்னுடைய பர்சனல் வாழ்கையை நான் மறைக்க விரும்பவில்லை என ரகுல் ப்ரீத் சிங் பேசியுள்ளார்.
பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியுடன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த உறவு உண்மைதான் என்பதை குறிக்கும் வகையில் கடந்த வருடம் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் ஜாக்கி பக்னானியும் இணைந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். தொடர்ந்து இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றினர்.
இந்த நிலையில் இந்த உறவு குறித்து அவர் கூறும் போது, “எந்தவொரு நபரின் பர்சனல் வாழ்கையும், அவரது வாழ்வில் நடக்கும் பிற விஷயங்களை போன்று மிகவும் இயல்பான ஒன்றுதான். நாங்கள் நடிகர்களாக இல்லாவிட்டால் இது போன்ற விஷயங்கள் பேசு பொருளாக மாறாது. எந்த ஒரு மனிதராக இருப்பினும் அவர் ஒரு உறவில் இருக்கும் அது அவருக்கு இயல்பான முன்னேற்றமாகவே இருக்கும். அந்த வகையில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கு அடுத்தபடியாக உங்களின் கணவர் இருப்பார்.” என்று பேசியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர் “இந்த உறவை நாங்கள் மறைக்க விரும்ப வில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். அதை நாங்கள்அங்கீகரிக்க விரும்புகிறோம். ஆனால் அதற்காக எல்லா இடங்களிலும் இது பேசும் பொருளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய தொழிலை பொருத்தவரை என்னுடைய வேலை பேசும். எங்கள் இருவருக்கும் தனித்தனி பாதை இருக்கிறது. எங்களை பற்றிய செய்திகள்வரும் போது நான் அதைப்படிப்பதில்லை.
என்னுடைய வேலைதான் எனக்கு முக்கியம். என்னுடைய வேலையை நான் வேலையாகவே பார்க்கிறேன். நான் ஒரு பெண். நடிப்பது எனது தொழில். இதை விட்டு நான் திரும்பும் போது ஒரு சாதரண பெண்ணாக, மிகவும் இயல்பான ஒரு வாழ்கையை எதிர்கொள்கிறேன். இதை எனக்கு என்னுடைய துறை சாராத நண்பர்களும், குடும்பத்தினரும் வழங்குகிறார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்திருக்கிறேன். தொழிலுக்கும் பர்சனல் லைஃப்புக்குமான இந்த இடைவெளி மிகவும் முக்கியமானது. உங்களுக்கு அப்படியான நண்பர்கள் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் நீங்கள் மாயை கிடையாது” என்று பேசியுள்ளார்.