Rajinikanth On SPB | கடைசி பாடலாக இருக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.. எஸ்.பி.பி பற்றி ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு..
45 வருடங்களாக என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் சிங்கிள் டிராக் எனப்படும் ஒற்றை பாடல் இன்று வெளியானது. இமான் இசையமைத்துள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2021