Watch video: "அந்த 16 வருஷம் ரொம்ப முக்கியம்" சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் த்ரோபேக் வீடியோ!
Rajinkanth : நாளை நடிகர் ரஜினிகாந்த் இறப்பு தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அவரின் த்ரோபேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அன்று முதல் இன்று வரை அதே சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் நாளை (பிப்ரவரி 9ம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இதுவே போதும்:
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் த்ரோ பேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசுகையில் "பணம், பெயர், புகழ் இதை எல்லாம் சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் எதிர்பார்த்தது எல்லாம் சின்ன சின்ன கதாபாத்திரங்கள், வில்லன் கேரக்டர் பண்ணிக்கிட்டு, ஒரு ஸ்கூட்டர், கையில சிகரெட், ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கி சந்தோஷமா வாழ்ந்த போதும்னு நினச்சு நடிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீங்க என்ன எங்கயோ போய் உட்கார வைச்சுட்டீங்க. எனக்கு இதெல்லாம் எப்படி வந்ததுன்னு ஒன்னுமே புரியல. அந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.
ஆண்டவன் கிருபை:
நான் ஷூட்டிங்ல டான்ஸ் பண்ணறதே ரொம்ப ரொம்ப கஷ்டம். என் கூட இருக்குறவங்க, டான்ஸ் மாஸ்டர் எல்லாருக்குமே அது நல்லா தெரியும். சில நேரத்துல அது இருபது டேக் எடுக்கும். அப்படி இருக்கும் போது நான் எப்படி ஸ்டேஜ்ல ஆடுவேன். அத நினைச்சு கூட பார்க்க முடியல. ஆனா போன தடவை இந்த நிகழ்ச்சில சீஃப் கெஸ்ட்டா கலந்துக்கிட்ட போது ஒரு சின்ன மூவ்மெண்ட் போட்டேன். அதுக்கே எல்லாரும் அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. அதனால நா என்ன கஷ்டபட்டாலும் சரி இந்த முறை ஆடி தான் ஆகணும்னு சொல்லி முடிவு பண்ணி அந்த ஆண்டவன் கிருபையில என்னமோ எனக்கு தெரிஞ்சதை நான் ஆடினேன். நீங்க எல்லாரும் சந்தோஷபட்டு இருப்பீங்கனு நம்புறேன்.
என்னோட ரசிகர் பெருமக்களுக்கு நான் ஒண்ணே ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன். தயவு செய்து இதை யாரும் அட்வைஸா நினைக்காதீங்க. அந்த அளவுக்கு நான் வளரல. உங்களை பெற்றவர்கள் தான் நடமாடும் தெய்வங்கள். அவங்கள நீங்க சந்தோஷமா பாத்துக்கிட்டீங்கனா அந்த ஆண்டவன் நிச்சயமா உங்களை சந்தோஷமா பாத்துக்குவான். அதை விட பெரிய பூஜை இந்த உலகத்துல எதுவுமே கிடையாது.
Good morning friends❤#அன்புள்ள_ரஜினிகாந்த்#Vettaiyan #Thalaivar171 #Rajinikanth #LalsalaamFeb9 pic.twitter.com/16lahOKCOJ
— Viju (@Viju16614469) February 4, 2024
உங்களுடைய 14 வயதில் இருந்து 30 வயசு வரைக்கும் கோல்டன் பீரியட். அந்த 16 வருஷத்துல தான் நீங்க நல்லா படியா படிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை பெத்துக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகிடனும். அந்த 16 வருஷத்தை நீங்க வேஸ்ட் பண்ணிடீங்கன்னா உங்களோட வாழ்க்கையே வேஸ்ட்டா போயிடும்" என பேசி இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.