Jailer: ‘கெத்தா நடந்து வாரான்’ .. மாலத்தீவில் இருந்து இருந்து சென்னை வந்த ரஜினி.. சோகத்தில் ரசிகர்கள்
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியாவாக உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசை அமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் திரைக்கு வருகிறது.
முன்னதாக தமன்னாவின் அசத்தல் நடத்தில் வெளியான காவலா பாடலும், ரஜினியின் மாஸ் வசனத்தில் வெளியான ஹூக்கும் பாடலும் மாஸ் ஹிட்டாக இணையத்தில் டிரெண்டாகியது. அந்த வரிசையில் நேற்று மாலை ஜெயிலர் படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டது. ‘ஜுஜுபி’ என்ற பெயரில் ரத்தமும், சதையுமாக வெளியான 3 நிமிட பாடல் வரிகள் ரஜினியின் அதிரடி ஆக்ஷனை காட்டியுள்ளது.
அனிருத் இசையில் சூப்பர் சுப்பு வரிகளை பாடகி தீ தனக்கே உரிய பாணியில் பாடி அசத்தி உள்ளார். பாடலில் ”புலிக்கே பசிய தூண்டிப்புட்ட, கரண்டுல கைய வச்சிப்புட்ட, காவு வாங்காம விடுமா” வரிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜுஜுபி பாடலில் அனிருத்தின் மிரட்டல் இசையும், ரஜினியின் மிரட்டல் காட்சிகளும் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த நிலையில் நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இசை வெளியீட்டு விழாவுக்காக ரஜினி மாலத்தீவில் இருந்து சென்னை திரும்பிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் நடித்த ரஜினி ஓய்வுக்காக மாலத்தீவு சென்றிருந்தார். அங்கு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை திரும்பியுள்ளார். விமானத்திலும், விமான நிலையத்திலும் ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றனர். ஆனாலும், யாருக்கும் அந்த வாய்ப்பை கொடுக்காத ரஜினி தனது பாணியில் காரை நோக்கி வேகமாக நடந்து சென்றார். இதனால், ரஜினியுடன் செல்பி எடுக்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.