Rajini Nelson Combo: நெல்சனின் ப்ளாக் காமெடி ட்ராக்.. ரஜினியின் நகைச்சுவை ஹ்யூமர்! திரும்ப வரும் தில்லுமுல்லு ரஜினி!
கோலமாவு கோகிலா, டாக்டர் என தான் இயக்கிய இரண்டு படங்களிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட நெல்சன் திலீப்குமார், அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
![Rajini Nelson Combo: நெல்சனின் ப்ளாக் காமெடி ட்ராக்.. ரஜினியின் நகைச்சுவை ஹ்யூமர்! திரும்ப வரும் தில்லுமுல்லு ரஜினி! Rajinikanth Nelson Dilipkumar Combo what to expect thalaivar 169 will nelson black comedy style workout with rajini Rajini Nelson Combo: நெல்சனின் ப்ளாக் காமெடி ட்ராக்.. ரஜினியின் நகைச்சுவை ஹ்யூமர்! திரும்ப வரும் தில்லுமுல்லு ரஜினி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/d525573e3daa612a898ccc067f4925d9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ளது #தலைவர்169. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியான சில நேரத்தில், சமூக வலைதளத்தில் டிரெண்டாக ஆரம்பித்தது.
இந்நிலையில், நடிகர் நடிகைகளுக்கு, இசை அமைப்பாளர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது போல இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருப்பது வழக்கமான ஒன்றல்ல. கோலமாவு கோகிலா, டாக்டர் என தான் இயக்கிய இரண்டு படங்களிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட நெல்சன் திலீப்குமார், அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
விஜய் - ரஜினி மற்றும் நெல்சனின் காமெடி
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினியோடு கைகோத்திருக்கும் நெல்சன் பெரிய பட்ஜெட் படங்களை எப்படி இயக்கி இருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய் - ரஜினி இருவருக்கும் காமெடி செய்வது பிடித்தமான விஷயங்களில் ஒன்று. அதை இயல்பாகவாகவும், ரசிக்கும்படியும் நிறைய படங்களில் வெளிப்படுத்தி இருக்கின்றனர். காமெடி - நெல்சனுக்கு பரிச்சயமான ஒரு ஜானர் என்பதால், முன்னணி நடிகர்களை வைத்து, ரசிக்கும்படியான காமெடி கதைக்களத்தோடு சிறப்பாக படம் அமைத்திருப்பார் என தெரிகிறது.
ரஜினியின் அடுத்தப்படம் என்பதை பொறுத்தவரை, நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019-ம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ அவரது காமெடி நடிப்பிற்கு ஏதுவான காட்சிகளை கொண்டிருந்தது. அதனை அடுத்து, தர்பார், அண்ணாத்த படங்களில் செண்டிமெண்ட் அதிகமாக இருந்ததால் தில்லு முல்லு, மன்னன், முத்து, சந்திரமுகி போன்ற காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படும் திரைப்படத்தில் ரஜினியைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ரஜினி 169 படத்தை நெல்சன் இயக்க இருப்பதால், இப்படத்தில் கண்டிப்பாக நெல்சனின் ப்ளாக் காமெடி ட்ராக்கும், ரஜினியின் காமெடி ஹியூமரும் ஒத்துப்போகும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அனிருத் - ரஜினி காம்போ
பேட்ட, தர்பார் படங்களுக்கு இசையமைத்ததை அடுத்து மூன்றாவது முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத். அதே போல, கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என நெல்சன் திலீப்குமாரின் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளராகிவிட்ட அனிருத், ரஜினி 169 படத்திற்கும் ஒப்பந்தமாகி உள்ளார். பேட்ட தீம், டாக்டர் ஆல்பம் பெரிதாக பாரட்டப்பட்ட நிலையில் பீஸ்ட் ஆல்பத்திற்காக கோலிவுட் காத்திருக்கிறது. ரஜினி 169 அறிவிப்பு வீடியோவில் இடம் பெற்றிருந்த இசை பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், குறை சொல்லும் அளவிற்கும் இருக்கவில்லை. எனவே, நெல்சன் - ரஜினி - அனிருத் காம்போ மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கிவிட்ட நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளில் இருந்து தெரியவரும் படத்தின் ஸ்டைல் என்னவென்று!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)