Rajini Meets C.P. Radhakrishnan : ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்.. புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம், வியாசர் குகை, உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அத்துடன் மஹா அவதார் பாபா குகைக்கு செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2 மணிநேரம் ரஜினிகாந்த் மலை ஏறிய புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அத்துடன் அவரது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன் லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர். கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. முதல் நாளே படத்திற்கு பாசிட்டிவி விமர்சனங்கள் வர தொடங்கின. குறிப்பாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்த பிறகு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கூட்டம் திரையரங்கிற்கு படையெடுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி வரிசையான விடுமுறை நாட்களை சரியாக குறி வைத்து படம் ரிலீஸ் செய்யப்பட்டதும் ஜெயிலரின் வசூல் வேட்டைக்கு முக்கிய காரணம். இதனால் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் ஜெயிலர் ஜெயித்துக்கொண்டிருக்கிறது.
படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் 29 கோடி ரூபாயையும் வசூலித்ததாக கூறப்பட்டது. இது வேறு எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை என சொல்லப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் சென்றது. இத்திரைப்படம் பல்வேறு படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாகி ஆறு நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றோடு படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்திருக்கிறது. தற்போது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தெரிய வந்திருக்கிறது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் 416 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Manipur Case: மணிப்பூர் விவகாரம், 53 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்த சிபிஐ.. நியாயம் கிடைக்குமா?