Migrant Boat Accident : மீண்டும் சோகம்.. 60 பேர் உயிரிழப்பு.. ஆப்பிரிக்காவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் நேர்ந்த கோர விபத்து
ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
63 பேர் உயிரிழப்பு:
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 101 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கடந்த ஜுலை மாதம் 101 பேர் படகில் புறப்பட்டனர். அவர்கள் கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென படகு கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 38 பேரை பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 63 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் விபத்து நடந்தது எப்போது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
துனீசியா அருகே விபத்து:
இதனிடையே, கடந்த 10ம் தேதி அன்று துனீசியா அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 41 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனீசியாவிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு இத்தாலியை நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அது சிசிலி நீரிணைப் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக நீருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகிய நான்கு பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். 2023- ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் துனீசியா வழித் தடத்தில் சுமார் 800 அகதிகள் கடல் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தொடரும் சோகம்:
வறுமை மற்றும் உள்நாட்டுப் போரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் எதிர்பாராத விபரீதமாக நிகழ்ந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் படகுகள் பயணம் மேற்கொள்வதே ஆகும்.
2500 பேர் உயிரிழப்பு:
உணவு, உடை என அடிப்படை எதுவுமே இன்றி தவிப்பதை காட்டிலும், வெளிநாடுகளில் சென்று பிழைத்து விடலாம் என ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த பலரும் இந்த ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஐரோப்பிய நாடுகளுக்கான முக்கிய நுழைவு வாயிலாக உள்ள கேனரி தீவுகளை, கடந்த 2020ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையில் சுமார் 67 ஆயிரம் அகதிகள் வந்தடைந்துள்ளதாக சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதே குறிப்பிட்ட காலகட்டத்தில் கடல் மார்க்கமாக அகதிகள் பயணித்த படகுகள் கவிழ்ந்து, 2500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.