Thalaivar 171: 5-வது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி.. ரஜினிகாந்த் போடும் மாஸ்டர் பிளான்..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
தலைவர் 171-வது படத்திற்கு மீண்டும் ரஜினியுடன் இணைந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இதுவரை ரஜினிகாந்த் நடித்த ஐந்து படங்களைப் பார்க்கலாம்.
தலைவர் 171
We are happy to announce Superstar @rajinikanth’s #Thalaivar171
— Sun Pictures (@sunpictures) September 11, 2023
Written & Directed by @Dir_Lokesh
An @anirudhofficial musical
Action by @anbariv pic.twitter.com/fNGCUZq1xi
தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ரஜினிகாந்தின் 171-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தீபாவளி அன்று இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
சன் பிக்சர்ஸ் கூட்டணி
இதற்கு முன்பாக ரஜினியுடன் நான்கு முறை ரஜினியுடன் கூட்டணி அமைத்திருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஐந்தாவது முறையாக ரஜினியின் படத்தை தயாரிக்கிறது. அந்த ஐந்து படங்கள் பற்றி காணலாம்.
எந்திரன்
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் நடித்து ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். தமிழ் சினிமாவின் தொழில் நுட்பத்தை உயரத்துக்கு எடுத்துச் சென்றதில் எந்திரன் படத்திற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. எந்திரன் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் மொத்தம் ரூ.290 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.
பேட்ட
தீவிர ரஜினி ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகர்களுக்கு பந்தி போட்டு விருந்து வைத்தது போல் படத்தைக் கொடுத்தார். அதுதான் பேட்ட. இதுவரை ரஜினியை நாம் ரசித்துப் பார்த்த அத்தனை அம்சங்களையும் இந்தப் படத்தில் மறு உருவாக்கம் செய்தார் கார்த்திக். மிகப்பெரும் வெற்றியடைந்த இந்தப் படம் மொத்தம் ரூ.230 கோடிகளை வசூல் செய்தது.
அண்ணாத்த
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த.
ஜெயிலர்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிக வசூல் ஈட்டிய படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த 2.0 படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், மோகன்லான், ஷிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி , விநாயகன் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இசையமைத்த இந்தப் படம் சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேலாக வசூல் செய்ததது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் சொகுசு கார் பரிசளித்ததுடன். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கியது.
இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தலைவர் 170 படம்
இப்படியான நிலையில் ரஜினிகாந்த் தனது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்க அனிருத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.