![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajinikanth: அவரோட முடி அவ்வளவு அழகா இருக்கும்.. ரஜினிகாந்த்தின் மேக்கப் மேன் சொன்னது என்ன?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமான அவர் 49வது ஆண்டாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
![Rajinikanth: அவரோட முடி அவ்வளவு அழகா இருக்கும்.. ரஜினிகாந்த்தின் மேக்கப் மேன் சொன்னது என்ன? rajinikanth Hair style makeup man sundaramoorthy talks about his hair fall issue Rajinikanth: அவரோட முடி அவ்வளவு அழகா இருக்கும்.. ரஜினிகாந்த்தின் மேக்கப் மேன் சொன்னது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/016a4b7d8add53a1ac8bef13e3d9ba1a1710766154668572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் ரஜினிக்கு முடி உதிர்தல் பிரச்சினை எப்படி நடந்தது என்பதை மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி பகிர்ந்த பழைய நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமான அவர் 49வது ஆண்டாக தொடர்ந்து நடித்து வருகிறார். ஹீரோ, பாடகர், தயாரிப்பாளர் என பன்முக கொண்டவராகவும், 73 வயதிலும் நம்பர் 1 நடிகராக திகழ்ந்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. தொடர்ந்து வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என தலைவர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
முடியே அழகு
ரஜினி என்றாலே நம் அனைவருக்கும் அவரின் ஸ்டைல் தான் நியாபகம் வரும். அவரின் முடியை அப்படியே கோதி விட்டு பஞ்ச் டயலாக் பேசினால் தியேட்டரே அதிரும். அப்படிப்பட்ட ரஜினி காலப்போக்கில் முடி உதிர்தல் பிரச்சினையால் அவதிப்பட்டு விக் வைக்கும் நிலைக்கு சென்றார். எந்த காலத்திலும் தன்னுடைய ஒரிஜினல் தோற்றத்தை மறைக்க மாட்டார். பொது இடங்களில் முடி இல்லாத வழுக்கை தலையுடன் தான் தோன்றுவார். சொல்லப்போனால் இப்படி தோற்றத்தை அவமானமாக நினைக்கும் பலருக்கும் ரஜினி ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.
இப்படியான நிலையில் பிரபல மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி ரஜினிக்கு முடி உதிர்தல் பிரச்சினை எப்படி நடந்தது என்பது பற்றி நேர்காணலில் பேசியுள்ளார். அதில், “என்னுடைய உடம்பில் இரத்தமே மேக்கப் தான். எங்க தாத்தா, அப்பா ஆகியோருக்கு இதுதான் தொழில். நாங்கள் கூட்டு குடும்பமாக இருந்தோம். அதனால் நாடக குழுவுக்கு மேக்கப் போட செல்வார்கள். நான் 1947 ஆம் ஆண்டு தான் பிறந்தேன். 8, 9 வயதிலேயே நான் மேக்கப் போட ஆரம்பித்து விட்டேன். ரஜினிக்கு அபூர்வ ராகங்கள் படத்தில் நான் தான் மேக்கப் போட்டேன். இப்படி இருக்கையில் ரஜினிக்கென்று தனி மேக்கப் மேன் இல்லாமல் இருந்தது.
பாலசந்தர் தான் கவிதாலயாவில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை தயாரித்தார். அப்படத்தின் போது அவர் என்னை பரிந்துரை செய்தார். நான் அந்த படத்தில் ரஜினியின் தனிப்பட்ட மேக்கப்மேன் ஆக சென்றேன். ராகவேந்திரர் எப்படி போட்டோவில் இருப்பாரோ அப்படியே ரஜினிக்கு மேக்கப் போட்டேன். அதுமுதல் ரஜினிக்கு பெர்சனல் மேக்கப் மேனாக பணியாற்றினேன்.
தொடர்ந்து பாட்ஷா படத்தில் தாடி வைத்து ரஜினிக்கு போடப்பட்ட கெட்டப் அவருக்கு ரொம்ப பிடித்துப்போட்டது. அதன்பிறகு நான் அண்ணாமலை உள்ளிட்ட பல படங்களில் மேக்கப் மேனாக பணிபுரிந்தேன். ரஜினிக்கு அப்போது நன்றாக முடி இருந்தது. விக் எல்லாம் வைக்க விரும்ப மாட்டார்.
ரஜினி ஷாட்டுக்கு ரெடி ஆவதற்கு முன்பு முள் பற்கள் கொண்ட சீப்பை எடுத்து நன்றாக தலையை வாரிவிடுவார். பின்னர் தலையை ஒரு ஆட்டு ஆட்டும்போது முடி எப்படி நிற்கிறதோ அதுதான் ரஜினியின் ஹேர்ஸ்டைலாக இருக்கும். அவரின் முடி அவ்வளவு அழகா இருக்கும். எப்போது பார்த்தாலும் கையை வைத்து கோதிக்கொண்டே இருப்பார். காட்சிக்கு காட்சி சீப்பை கொண்டு வாருவார். அதன்பிறகு டை அடிப்பார். சிகரெட் பிடிப்பார். இப்படி நிறைய பிரச்சினையால் தான் அவரின் முடி எல்லாம் உதிர்ந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)