பைசன் படம் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு...என்ன சொன்னார் தெரியுமா
Rajinikanth Appreciates Bison : மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படத்தை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் பைசன் படத்தை பார்வையிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்
பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்
"சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘ -சூப்பர் ஸ்டார் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்." என மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘
— Mari Selvaraj (@mari_selvaraj) October 22, 2025
-சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன்… pic.twitter.com/QrNiTitvgB
ரஜினியுடன் பணியாற்றுவது குறித்து மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அண்மையில் மாரி செல்வராஜ் பேசியபோது இப்படி கூறினார்
“ரஜினி சாரை பல முறை சந்தித்திருக்கிறேன். சில கதைகளையும் அவரிடம் பகிர்ந்திருக்கிறேன். என் ஒவ்வொரு படம் வெளிவந்த போதும் அவர் அழைத்து பேசுவார். பரியேறும் பெருமாள் வெளியானபோது நேரில் சந்தித்து பாராட்டினார். கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். வாழை படத்திற்கோ ஒரு பெரிய கடிதமே எழுதி அனுப்பினார்,” என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதுடன் அவர் கூறியதாவது: “என்னை அவர் விரும்புகிறாரா என தெரியாது. ஆனால் அவரைப் போன்ற ஒரு மிகப்பெரிய நடிகருடன் நான் எப்படி பணியாற்றுவேன் என்ற சந்தேகம் அவருக்கு இருக்கலாம். ரஜினியுடன் படம் செய்வது தற்போது பேச்சுவார்த்தை நிலையில் தான் உள்ளது. நானும் பல வேறு வேலைகளில் இருப்பதால் அதைப் பற்றி இப்போது அதிகம் யோசிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் முடிவை ரஜினி சாரே எடுக்க வேண்டும். என்னிடம் கதை தயார் நிலையில் உள்ளது; அந்த கதையை ரஜினி செய்தாலும், துருவ் விக்ரம் செய்தாலும் பரவாயில்லை. முக்கியம் என்னவென்றால், யார் நடிகராக இருந்தாலும் என் கதையையும் அதில் உள்ள மனிதர்களையும் நம்பி வந்தால், நான் அவர்களுடன் பணியாற்றத் தயார்,” என்று அவர் கூறினார்.





















