மேலும் அறிய

Maamannan: 'மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன்’ உதயநிதியின் மாஸ்டர் பிளான்... உற்சாகத்தில் ரசிகர்கள்..!

மாமன்னன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாமன்னன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் டூ அமைச்சர் உதயநிதி

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வளர்த்துக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். நல்ல நல்ல கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெறுவார். நடிப்பு, தயாரிப்பு என திரையுலகில் கோலோச்சி வந்த உதயநிதி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். உடனே கையோடு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவித்தார். அவரின் கடைசிப் படமாக மாமன்னன் இருக்கும் எனவும், நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் தான் நடிக்கவுள்ள படத்தில் இருந்து விலக உள்ளதாகவும் உதயநிதி அறிவித்தார். 

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் படம் 

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் “மாரி செல்வராஜ்”. அவரின் அடுத்தப்படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும்,  கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.  மேலும் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. 

இதனிடையே  கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மே 1 ஆம் தேதி இரண்டாவது போஸ்டரும் வெளியானது. விரைவில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதியின் கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். 

உதயநிதியின் மாஸ்டர் பிளான் 

இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவை ஜூன் 1ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைசிப் படம் என்பதால் இதனை பிரமாண்டமாக நடத்த உதயநிதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போதே இசை வெளியீட்டு விழா மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ரஜினி, கமல் இருவரும் பொன்னியில் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒன்றாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget