மேலும் அறிய

Jailer Box Office: பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என்பதை நிரூபித்த ரஜினிகாந்த்... 2 நாள்களில் ஜெயிலர் வசூல் இத்தனை கோடிகளா!

Jailer Box Office Collection:தமிழ்நாட்டில் ரிலீசான முதல் நாளில்  மட்டும் ரூ.23.4 கோடிகளையும், நேற்று ரூ.16.1 கோடிகளையும் படம் வசூலித்துள்ளது.

Jailer: ஜெயிலர் படம் வெளியான மூன்றே நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை நெருங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சல் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கும் படம் ஜெயிலர். இதில் ரஜினியைத் தவிர ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், மிர்னா மேனன், தமன்னா, விநாயக், யோகிபாபு, ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் ஜெயிலரின் பிஜிஎம் மற்றும் பாடல்கள் பட்டையைக் கிளப்பி உள்ளன. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று முன் தினம் உலகமெங்கும் ஜெயிலர் படம் ரிலீசானது. 

ரிலீசான நாளில் இருந்து தொடர்ந்து 5 நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலர் டிக்கெட் இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஜெயிலர் படத்தை ஒட்டி வேறெந்த சிறிய பட்ஜெட் படங்கள் கூட திரைக்கு வரவில்லை. இந்த நிலையில் ஜெயிலர் படம் ரிலீசான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ரிலீசான முதல் நாளில்  மட்டும் ரூ.23.4 கோடிகளையும், நேற்று ரூ.16.1 கோடிகளையும் வசூலித்து, இரண்டு நாட்களின் தமிழ்நாட்டில் கலெக்‌ஷன் ரூ.40 கோடிகளை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது நாளான இன்று விடுமுறை என்பதால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் மேலும் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் கலகெஷன் குறித்து தகவல் வெளியிடும் sacnilk தளம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த இணையதளம் பகிர்ந்த தகவலில், ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் கர்நாடகாவில் ரூ.11 கோடிகளையும், ஆந்திராவில் ரூ.12 கோடிகளையும், தமிழ்நாட்டில் ரூ.23 கோடிகளையும், கேரளாவில் ரூ.5.9 கோடிகளையும், மற்ற மாநிலங்களில் ரூ.3 கோடிகளையும் என மொத்தமாக ரூ.56.6 கோடிகள் வசூலித்துள்ளது.

நேற்று கர்நாடகாவில் ரூ.4 கோகளையும், ஆந்திராவில் ரூ.4.5 கோடிகளையும், தமிழ்நாட்டில் ரூ.16.1 கோடிகளையும், கேரளாவில் ரூ.4.8 கோடிகளையும், மற்ற மாநிலங்களில் ரூ.85 லட்சங்களையும் என மொத்தமாக ரூ.30.3 கோடி வசூலாகி உள்ளது.

ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதும் இரண்டே நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூல் 74.10 கோடிகள் என sacnilk தளம் தெரிவித்துள்ளது. இன்றைய வசூலையும் சேர்த்து 104 கோடிகளைக் கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக உலகம் முழுவதுமான கலெக்‌ஷன் 143 கோடிகளை ஜெயிலர் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 150 கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் வசூல், இன்று தொடங்கி ஞாயிறு, சுதந்திர தினம் என அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக இருப்பதால் பாக்ஸ் ஆபிசில் விரைவில் ரூ.200 கோடிகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இதுவரை சன் பிச்சர்ஸ் தரப்பில் இருந்து பாக்ஸ் ஆஃபிஸ் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கிடைத்தது இதயம்.. சாமுண்டீஸ்வரியை சாகடிக்கத் துடிக்கும் சிவனாண்டி! லாரியிடம் இருந்து தப்புமா ஆம்புலன்ஸ்?
Karthigai Deepam: கிடைத்தது இதயம்.. சாமுண்டீஸ்வரியை சாகடிக்கத் துடிக்கும் சிவனாண்டி! லாரியிடம் இருந்து தப்புமா ஆம்புலன்ஸ்?
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Embed widget