Rajamouli| ‛ராம் சரண் அப்படி... ஜூனியர் என்.டி.ஆர் இப்படி...’ ராஜமௌலி ஓபன் டாக்!
ராம் சரண் ஒரு சிறந்த நடிகர் ஆனால் அது அவருக்கே தெரியாது. தாரக் (ஜூனியர் என்.டி.ஆர்) ஒரு சிறந்த நடிகர், அது அவருக்கே தெரியும் என வெளிப்படையாக கூறிய ராஜமௌலி
பாகுபலி என்னும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம்தான் ‘ஆர்.ஆர்.ஆர்’ . இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர வீரர்கள் இருவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா நாயகிகளாக நடித்துள்ளனர். படம் வருகிற ஜனவரி 7 ஆம் தேதியன்று திரையரங்கில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். சமீபத்தில் நடிகர் சல்மான் கானும் கூட இயக்குநர் ராஜமௌலியை வெகுவாக பாராட்டியிருந்தார். சினிமாவிற்காகவே வாழும் மனிதர்தான் ராஜ மௌளி..இவர் எடுக்கும் படங்கள் மட்டும்தான் குடும்பத்துடன் பார்ப்பதாக இருக்கும் என நினைக்கிறேன் . என கூறியிருந்தார் சல்மான் கான் . அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலனாது.
Salman Khan about Rajamouli sir " I think the director we have and his whole family also see , talk , live only for cinema " #SalmanKhan pic.twitter.com/C1AQJ4oLat
— A Y U S H (@fanofsalman07) December 20, 2021
இந்த நிலையில் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமௌலி இரண்டு டாப் ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கிய அனுபவம் குறித்து பேசினார். “ என்னோட ராம் மற்றும் பீம் . இந்த பயணத்துல அவங்க என்னோட குடும்பத்தை சேர்ந்தவங்கள போல உணர்றேன். இதுக்கும் முன்னால இவங்க ரெண்டு பேரையும் வச்சு நான் படம் பண்ணியிருக்கேன். அதன் மூலம் கிடைத்த வெற்றிதான் என்ன ஸ்டார் இயக்குனராக மாற்றியது. நிறைய பேர் என்கிட்ட கேட்கும் கேள்விகளுள் ஒன்று ராம் சரணுக்கும் , Tarak (ஜூனியர் என்.டி.ஆர்)க்கிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதுதான். ராம் சரண் ஒரு ஆழமான நதி போன்றவர். அவர் அமைதியாக இருப்பார். ஆனால் அவருக்குள்ளாள் நிறைய ஆற்றல் இருக்கிறது. அதே போல தாரக் ஒரு இடியுடன் கூடிய நீர்வீழ்ச்சி. அதில் முழுவதும் உயிர் இருக்கும் . அவர் ஒரு இயக்க ஆற்றல் “என தனது நடிகர்கள் குறித்து பெருமையாக கூறியுள்ளார். மேலும் இந்த இரண்டு ஆற்றலையும் இயக்க RRR படம் எனக்கு வாய்ப்பளித்தது என கூறினார்.
He ran like a tiger 🐯 pic.twitter.com/a1fYVGgDSe
— NTR fans Club (@NTR_Fans_Page) December 20, 2021
ராம் சரண் ஒரு சிறந்த நடிகர் ஆனால் அது அவருக்கே தெரியாது. தாரக் (ஜூனியர் என்.டி.ஆர்) ஒரு சிறந்த நடிகர், அது அவருக்கே தெரியும் என வெளிப்படையாக கூறிய ராஜமௌலி இரண்டு நடிகர்களும் தங்களின் அறிமுக காட்சிகளுக்காக கடுமையாக உழைத்ததையும் வெளிப்படுத்தினார். ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்காக கால்களில் செருப்புகள் இல்லாமல் , காட்டில் ஓட வைத்தார்களாம். அவர் ஒரு புலியை போட ஓடினாராம். ராம் சரணின் அறிமுக காட்சிக்காக அவரை 2000 பேர் நிறைந்த ஒரு கூட்டத்திற்குள் தள்ளி விட்டார்களாம். தூசி , வியர்வை , இரத்தம் என அவதியுற்றாராம் ராம் சரண். தனது கெரியரில் தான் எடுத்த மிகச்சிறந்த படம் என்றால் அது ஆர்.ஆர்.ஆர் தான் என முடித்தார் ராஜமௌலி.